நாட்டில் உள்ள இளம் வயதினரில் ஐந்தில் நான்கு பேர் போதுமான வகையில் சுறுசுப்பாக இல்லை என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா கூறுகிறார்.
மூன்று இளம் வயதினரில் இருவர் உட்கார்ந்த நிலையில் மட்டுமே உடற்பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
“நாட்டில் இளம் வயதினரில் அதிகமானவர்கள் சுறுசுறுப்பாக இல்லை. எனவே, ஏன் காத்திருக்க வேண்டும், இப்போதே தொடங்கி ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்யலாம்”.
“30 நிமிடங்கள், வாரத்திற்கு ஐந்து முறை. இது எளிதானது அல்லவா?, ”என்று அவர் இன்று கற்றல் நிறுவனங்களில் ஹெபிலி 2023 சுகாதார மேம்பாட்டு திட்டத்துடன் இணைந்து இவ்வாறாக கூறினார்.