MCA, MIC PN இல் சேர விரும்பினால் எந்த ஆட்சேபனையும் இல்லை – கெராக்கான் 

பெரிக்காத்தான் நேசனல் (PN) தேர்தல் இயக்குநர் முகமட் சனுசி முகமட் நோர், MCA மற்றும் MICஐ கூட்டணியில் சேர அழைப்பதில், தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கெராக்கான் தலைவர் டொமினிக் லாவ் கூறினார்.

“PN இன் இலட்சியங்களுடன் உடன்படும் எவரும் கெராக்காவின் நிலைப்பாடு… அக்கறை, நேர்மை, நிலைத்தன்மை – நாம் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியும்,” என்று அவர் நேற்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது கூறினார்.

கூட்டணியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் எந்தவொரு தனிநபர்களுக்கும் அல்லது அரசியல் கட்சிகளுக்கும் PN இன் கதவுகள் திறந்திருக்கின்றன என்று லாவ் மேலும் கூறினார்.

கெராக்கான் ஒரு முன்னாள் BN உறுப்புக் கட்சி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“அவர்கள் PN இல் சேர விரும்பினால், அவர்கள் PH மற்றும் BN உடன் உடன்படவில்லை என்றும் அர்த்தம். நாங்களும் BN-லிருந்து விலகிவிட்டோம். எங்கள் கட்சியான கெராக்கான், BN ஐ விட்டு வெளியேறிவிட்டது”.

“எனவே அவர்கள் BN ஐ விட்டு வெளியேறி, PN லட்சியங்களுக்கு உடன்பட முடிவு செய்தால், நாங்கள் அதை ஏற்கலாம் என்று நான் நினைக்கிறேன்,” என்று லாவ் கூறினார்.

இருப்பினும், சனுனி தனது தனிப்பட்ட கருத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறார் என்று வலியுறுத்திய அவர், எந்தவொரு முக்கிய முடிவையும் முன்கூட்டியே விவாதிக்க வேண்டும் என்றும் கூறினார்.

பெரிக்கத்தான் நேசனல் தேர்தல் பணிப்பாளர் முகமது சனுசி முகமது நோர்

“இது அவரது (சனுசியின்) அறிக்கை மற்றும் PN ஐ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. PN உச்ச மன்றம் எடுக்கும் முடிவுகள் மட்டுமே கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன”.

“பெர்சத்து அதன் சொந்த கருத்தைக் கொண்டிருக்கலாம், பாஸ் அதன் சொந்த கருத்தைக் கொண்டிருக்கலாம், கெராக்கானும் அதன் சொந்த கருத்துக்களைக் கொண்டிருக்கலாம்”.

” PN இல் யார் சேரலாம் என்பது குறித்து, அது உச்ச கவுன்சிலால் தீர்மானிக்கப்பட வேண்டும். அது மட்டுமே  PN இன் (அதிகாரப்பூர்வ) நிலைப்பாடாக இருக்கும், “என்று லாவ் கூறினார்.

வியாழனன்று, மசீசவும் மஇகாவும் வரவிருக்கும் ஆறு மாநிலத் தேர்தல்களிலிருந்து விலகுவதற்கான தங்கள் முடிவை அறிவித்தபின்னர், சனுசி இரண்டு கட்சிகளும் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதாகக் கூறி, அதற்குப் பதிலாக PN இல் சேருமாறு அழைப்பு விடுத்தார்.

எவ்வாறாயினும், சனுசியின் முன்மொழிவை MCA திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.