இன்று ஆட்சியாளர்களுக்கு எதிராக இரண்டு தேசத்துரோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பின்னர், அரசாங்கம் பேச்சு சுதந்திரத்தை முடக்குவதாக சனுசி நோர் குற்றம் சாட்டியுள்ளார்.
பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநரும், கெடா மந்திரி பெசார் சனுசி, ஜூலை 11 அன்று கோம்பாக்கில் உள்ள செராமாவில் பேசியது தொடர்பாக தனி நீதிமன்றங்களில் இரண்டு தேசத்துரோக குற்றச்சாட்டுகள் அவர் மீது சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சனுசி எந்த கருத்தையும் கூறக்கூடாது என இரு நீதிபதிகளும் தடை விதித்தனர்.
நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சனுசி, ஆகஸ்ட் 12ஆம் தேதி 6 மாநிலத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இவை அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகள் எனக் கூறினார்.
“மலேசியாவில், நாங்கள் எதுவும் சொல்ல முடியாது என்று தெரிகிறது,” என்று சனுசி கூறினார்.
“மலேசியாவில், மக்களைக் கைது செய்வதற்கும், எங்கள் பேச்சு சுதந்திரத்தை நசுக்குவதற்கும் காவல்துறையைப் பயன்படுத்தும் ஒரு பயமுறுத்தும் அரசாங்கம் உள்ளது,
“இந்தக் குற்றச்சாட்டுகளின் மூலம், பல மலேசியர்கள் இப்போது அரசாங்கத்தின் உண்மையான நோக்கங்களை உணர்ந்திருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.”
சனுசி தனது வழக்குகளின் விசாரணை மூன்று நாட்கள் மட்டுமே எடுத்ததால் அவசரமாக நடந்ததாக குற்றம் சாட்டினார்.
ஊடகங்கள் மூலம் தான் குற்றஞ்சாட்டப்படும் என்று தான் அறிந்தேன் என்று கூறிய அவர், நீதிமன்றத்தில் ஆஜராகப் போவதாக கூறியிருந்தும் இன்று அதிகாலை தான் கைது செய்யப்பட்டதாக கூறினார்.
“நான் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று பல தரப்பினருக்குத் தெரிவித்தேன், ஆனால் அவர்கள் அதிகாலை 3 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள எனது குடியிருப்பில் என்னைக் கைது செய்ய விரும்பினர்”.
“என்னை விசாரித்து கைது செய்தபோது நான் முழு ஒத்துழைப்பை அளித்தேன் என்று அவர் தெரிவித்தார்”.
இதற்கிடையில், போலிசார் பலமுறை சனுசியுடன் தொடர்பு கொள்ள முயன்றதாகவும் ஆனால், அவர் அதை நிரகரித்ததால் தான் கைது செய்யப்பட்டார் என்று தெரிவித்தனர்.
-fmt