சரவாக்கில் உள்ள ஆவணமற்ற மக்களின் பிரச்சனையை சமாளிக்க உள்துறை அமைச்சகம் பணிக்குழுவை அமைத்துள்ளது

மாநிலத்தில் உள்ள ஆவணமற்ற மக்கள்தொகை தொடர்பான பிரச்சினைகளை கூட்டாக தீர்க்க சரவாக் அரசாங்கத்துடன் உள்துறை அமைச்சகம் ஒரு சிறப்பு பணிக்குழுவை நிறுவியுள்ளது.

உள்துறை அமைச்சர் சைபுடீன்  இஸ்மாயில், பணிக்குழுவில் இரண்டு குழுக்கள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

சைபுடீன் மற்றும் சரவாக் பிரதமர் அபாங் ஜொஹாரி ஓபன் ஆகியோர் இணைத் தலைவராக உள்ள பிரதான குழு, சிக்கலைத் தீர்ப்பதற்கான கொள்கைகளைத் தீர்மானிக்கும்.

“இன்னொரு தொழில்நுட்பக் குழு, தேசியப் பதிவுத் துறை இயக்குநர் ஜெனரலும் மாநிலச் செயலாளரும் கூட்டாகத் தலைமை தாங்குகிறார்கள்.

“தொழில்நுட்பக் குழு, சிக்கலைத் தீர்ப்பதற்கான வழிமுறை மற்றும் முறை குறித்து முடிவு செய்யும்” என்று சைபுடீன் இன்று 12 வயதுக்குட்பட்ட 62 குழந்தைகளுக்கு குடியுரிமை ஆவணங்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறாகக் கூறினார்.

சரவாக் முதல்வர் துறையின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், மாநிலத்தில் 9,314 பேரிடம் அடையாள ஆவணங்கள் இல்லை.

“சரவாக் அரசாங்கத்திடம் ஒரு தரவுத்தளம் உள்ளது, இது உள்துறை அமைச்சகத்திற்கு சம்பந்தப்பட்ட நபர்களின் நிலையை எளிதாகக் கண்டறிய உதவுகிறது.”

சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்க சிறப்புப் பணிக்குழுவுக்கும் இந்த தரவுத்தளம் பயனுள்ளதாக இருக்கும் என்று சைபுடீன் கூறினார்.

 

 

-fmt