பினாங்கு மாநிலத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படாத இராமசாமி, ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு இணைந்த அதே டிஏபி-தான் இப்போதும் இருக்கிறதா என்று வினவுகிறார்.
2005 இல் டிஏபி உறுப்பினரான 74 வயதான கல்வியாளர்-அரசியல்வாதி, வேட்பாளார் வரிசையை அறிவிப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று அவர் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.
“நேற்று, வேட்பாளர் வரிசை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. கட்சி புத்துணர்ச்சியைக் காரணம் காட்டி, பலர் கைவிடப்பட்டனர், ஆனால் உண்மை என்னவென்றால், பல இளைய வேட்பாளர்கள் கூட மிகவும் வயதான வேட்பாளர்களால் மாற்றப்பட்டனர்.”
கடந்த மாதம், மாநிலத் தேர்தலுக்கான டிஏபி வேட்பாளர்களின் வைரல் பட்டியலை போலியானது என்று கட்சி நிராகரித்தது, ஆனால் நேற்றைய பட்டியல் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் இருந்தது.
“ஏன் இந்த முரண்பாடு?” என்று தற்போதைய பெராய் சட்டமன்ற உறுப்பினரும், தற்காலிக துணை முதலமைச்சருமான மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் னினவினர்.
மேலும், இந்த ஏற்பாடுகள் பினாங்கு டிஏபிக்குள் ஏதோ தவறு இருப்பதாகத் தோன்றுவதாக இராமசாமி (மேலே) கூறினார்.
எனினும், இது குறித்து அவர் விரிவாகக் கூறவில்லை.
இராமசாமியின் கூற்றுப்படி, டிஏபி தலைமைப் பதவியில் இருந்தவர்களில் சிலரை நீக்குவதற்கான காரணம் ஒரு “பின்னோசனை” போல் தெரிகிறது என்றார்.