மதசார்பற்ற நாடு வேண்டும் என்று போரடிய சமூக போராளி  ஹரீஸ் இப்ராஹிம் காலமானார்

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் ஹரிஸ் இப்ராஹிம் இன்று நண்பகலில் காலமானார். அவருக்கு வயது 63.

ஹரிஸ் தாமன் துன் டாக்டர் இஸ்மாயிலில் உள்ள தனது சகோதரர் வீட்டில் கலமானார்.

சமூக போராளியான ஹரிஸ் கடந்த ஆண்டு அசோக் வழக்கறிஞர்  நிறுவனத்தில் சேர்ந்தார், அவர் 4ஆம் நிலை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும்  சட்டத்துறைக்கு திரும்பினார்.

ஹறிஸ் மலேசியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்ற கொள்கையை கொண்டவர். பெர்சே 2.0 அமைப்பில் பங்கற்றியவர்.

கடந்த 10 ஆண்டுகளாக, ஹரிஸ் மத சுதந்திரம் மற்றும் சிவில் மற்றும் ஷரியா நீதிமன்றங்களின் அதிகார வரம்பு பற்றிய கேள்விகளைக் கையாண்ட பல வழக்குகளில் ஈடுபட்டவர்.

அதைத் தொடர்ந்து, மலேசிய அரசியலில் “மூன்றாவது சக்தி” தேவை என்ற சொற்பொழிவை வடிவமைத்த ‘அசல்கான் புக்கான் அம்னோ’ இயக்கத்தின் நிறுவனர் என்றும் அவர் பாராட்டப்பட்டார்.

ஹரீஸ்க்கு 28 வயதுடைய ஒரு  மகனும் 18 வயதுடைய ஒரு  மகளும் உள்ளனர்.