அரசு ஊழியர்களுக்குச் சிறிதளவு சம்பளத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது – பிரதமர்

எதிர்வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள இரண்டாவது மதானி வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை சிறிதளவு உயர்த்த அரசாங்கம் முயற்சித்து வருவதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத் திட்டம்குறித்த விரிவான ஆய்வு முடியும் வரை இது ஒரு தற்காலிக நடவடிக்கையாகும் என்றார்.

“அடுத்த ஆண்டு ஆய்வு நிறைவடையும் வரை காத்திருக்கும் அதே வேளையில், இந்த அக்டோபரில் மதானி பட்ஜெட் மூலம் சம்பளத்தை சற்று அதிகரிக்க முயற்சிப்பேன்,” என்று அவர் இன்று லங்காவியில் ஜியோபார்க் டிஸ்கவரி மையத்தைத் திறந்து வைத்தபோது தனது உரையில் கூறினார்.