பக்காத்தான்-பாரிசான் வெற்றி பெற்றால் பினாங்கில் பொது விடுமுறை இல்லை – சோவ்

நடைபெறும் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் வெற்றி பெற்றால், வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று பினாங்கு பராமரிப்பாளரான முதல்வர் சோவ் கோன் இயோவ் கூறுகிறார்.

“பக்காத்தான்-பாரிசான் வெற்றி பெற்றால் நான் திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்க மாட்டேன்,” என்றுஅவர் கூறியதை வட்டாரங்கள் மேற்கோள் காட்டியது.

இன்று முன்னதாக, சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதின் ஷாரி பக்காத்தான்-பாரிசான்  வெற்றி பெற்றால் மாநிலத்தில் திங்கட்கிழமை பொது விடுமுறையாக அறிவிப்பதாக உறுதியளித்தார்.

வாக்குப்பதிவு நாளான சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கும் திட்டம் இல்லை என்று சோவ் முன்பு கூறியிருந்தார்.

அதேபோல், தனியார் துறைக்கு தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்துவதையும், “வாக்காளர்களை மகிழ்விப்பதற்காக” குற்றம் சாட்டப்படுவதையும் தவிர்க்க, ஆகஸ்ட் 12 ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவிக்க மாட்டோம் என்றும் சிலாங்கூர் கூறியது.

கடந்த நவம்பரில் நடைபெற்ற 15வது பொதுத் தேர்தலில், வாக்காளர்கள் வீடு திரும்பவும் வாக்களிக்கவும் போதுமான நேரத்தை அனுமதிக்கும் வகையில், வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக நவம்பர் 18 வெள்ளிக்கிழமை அன்று பினாங்கு பொது விடுமுறை அறிவித்தது.

 

-fmt