பக்காத்தான் – பாரிசான் கூட்டணி மாநிலத் தேர்தல்களில் முதல் சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளது – அஸ்லினா

சனிக்கிழமையன்று நடந்த ஆறு மாநில தேர்தல் முடிவுகள் பக்காத்தான் ஹராப்பான்-பாரிசான் நேஷனல் கூட்டணி பல தசாப்தங்களாக எதிரிகளாக இருந்த போதிலும் இணைந்து செயல்படுவதற்கான அதன் முதல் சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளது என்று அம்னோ தகவல் தலைவர் அஸ்லினா ஒத்மான் கூறினார்.

பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெற்ற இடங்களின் “பசுமை அலை” என்று அழைக்கப்படுவதை கூட்டணி வெற்றிகரமாக முறியடித்துவிட்டது என்று பக்காத்தான் ஹராப்பான் பாஹ்மி பாடிசில் கூறியதை அவர் ஒப்புக்கொண்டார்.

பக்காத்தான் – பாரிசான் கூட்டணி மொத்தமாக 3.39 மில்லியன் (49.58%) வாக்குகளைப் பெற்றுள்ளது என்றும், பெரிக்காத்தான் நேஷனல் பெற்ற 3.38 மில்லியன் வாக்குகளை விட (49.33%) சுமார் 17,000 வாக்குகள் முன்னிலையில் இருப்பதாகவும் அஸலினா கூறினார்.

நவம்பரில் அன்வார் இப்ராஹிம் ஐக்கிய அரசாங்கத்தை அமைத்ததில் இருந்து எட்டு மாதங்கள் மட்டுமே கூட்டாளிகளாக இணைந்து பணியாற்றிய போதிலும் மாநிலத் தேர்தல்களில் வெற்றி கிடைத்துள்ளது. “ஒற்றுமை என்ற பெயரில் அரசியல் வேறுபாடுகள் ஒதுக்கி வைக்கப்பட்டன,” என்று அவர் கூறினார்.

பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் ஒற்றுமைக் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. இருப்பினும், ஆறு மாநிலங்களில் போட்டியிட்ட 108 இடங்களில் 19 இடங்களை வென்ற அம்னோ இந்த மாநிலத் தேர்தல்களில் மோசமான நிலையை அடைந்துள்ளது .

பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானிலும் பெரிக்காத்தான் நேஷனல் முன்னேறியது, கெடா, கிளந்தான் மற்றும் தெரெங்கானுவின் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டு, அந்த மாநிலங்களில் இடங்களைப் பிடித்தது.

அஸ்லினா ஒத்மான்

அம்னோவிற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து கட்சித் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி பதவி விலக வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் இந்தசூழலில் யாரையும் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று அஸ்லினா கூறினார்.

இரு கூட்டணிகளுக்கு இடையிலான கூட்டாண்மையை விளக்குவதற்கான முயற்சிகளை மேம்படுத்த ஐக்கிய கூட்டணியை அவர் வலியுறுத்தினார்.

பல தசாப்தங்களாக கசப்பான எதிரியாக இருந்த பக்காத்தானின்  உறுப்பினரான டிஏபி உடனான கூட்டணியால் அம்னோ உறுப்பினர்கள் சங்கடமாக இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர். இத்தகைய அமைதியின்மை பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஆதரவாக எதிர்ப்பு வாக்குகள் பெறுவதற்கு பங்களித்திருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.

2027 ஆம் ஆண்டுக்குள் நடைபெற வேண்டிய அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக ஐக்கிய அரசாங்கம் வேட்பாளர் தேர்வு, அதன் கூட்டு அறிக்கை, தேர்தல் மையங்கள் மற்றும் பிரச்சார முயற்சிகளை மேம்படுத்த வேண்டும்.

“இது எதிர்காலத்தில் மிகவும் உறுதியான புரிதலை உருவாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துவதில் இரு கூட்டணிகளுக்கும் பயனளிக்கும்,” என்று அஸ்லினா கூறினார்.

 

 

-fmt