GRS  அனைத்து சபா தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான முன்மொழிவை SAPP விளக்க வேண்டும் – ரொனால்ட்

சபா முற்போக்குக் கட்சியின் Sabah Progressive Party (SAPP) தலைவர் யோங் டெக் லீ அடுத்த தேர்தலில் சபாவில் உள்ள அனைத்து 73 மாநிலத் தொகுதிகளிலும் கபுங்கன் ரக்யாட் சபா (Gabungan Rakyat Sabah) போட்டியிடுவதற்கான தனது முன்மொழிவு குறித்து மத்திய பெரிக்காத்தான் நேசனலுக்கு தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும்.

சபா PN தலைவர் ரொனால்ட் கியாண்டி கூறுகையில், கூட்டாட்சி மட்டத்தில்  PN இன் ஒரு பகுதியாக இருக்கும் கட்சியின் (SAPP) நிலையைக் கருத்தில் கொள்ளாமல் சபாவில் ஆளும் GRS உறுப்பினர் என்ற முறையில் யோங்கின் முன்மொழிவு செய்யப்பட்டது என்றார்.

“சபாவில் ஜனநாயக செயல்முறையில்  PN உட்பட பிற அரசியல் கட்சிகள் பங்கேற்பதை எந்தக் கட்சியும் தடுக்க முடியாது என்பதையும் சபா  PN வலியுறுத்துகிறது,” என்று ரொனால்ட் (மேலே) இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

SAPP தலைவர் யோங் டெக் லீ

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 13), ஜிஆர்எஸ் துணைத் தலைவரான யோங், அடுத்த மாநிலத் தேர்தலில் அனைத்து 73 சபா மாநிலத் தொகுதிகளிலும் கூட்டணி போட்டியிட வேண்டும் என்றும், தேர்தலில் ஒத்துழைப்புக்காக உள்ளூர் அல்லாத கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.

ரொனால்டின் கூற்றுப்படி, சபா உட்பட அனைத்து மாநிலங்களிலும் PN தனது நிலையை வலுப்படுத்த விரும்புகிறது.

இதற்கிடையில், யோங் இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்த முன்மொழிவு  SAPPயின் உள்விவகாரம் என்றும், ஜிஆர்எஸ்ஸில் அதன்  கூட்டாளிகள் மற்றும் பிற கட்சிகள் தலையிடக் கூடாது என்றும் கூறினார்.

மாநில அரசாங்கத்திற்கு தலைமை வகிக்கும் GRS இன் அங்கக் கட்சிகள், Parti Gagasan Rakyat Sabah, SAPP, Parti Bersatu Sabah (PBS), Parti Solidariti Tanah Airku (Star), United Sabah National Organisation (Usno), Parti Harapan Rakyat Sabah (PHRS) and Liberal Democratic Party (LDP)ஆகியவை ஆகும்.

SAPP என்பது கூட்டாட்சி மட்டத்தில் பெர்சத்து, பாஸ் மற்றும் கெராக்கான் ஆகியவற்றுடன் ஒரு PN கூறு கட்சியாகும்.