பினாங்கில் சட்டவிரோத பந்தயக்காரர்கள் மீதான அதிரடி நடவடிக்கை வெள்ளிக்கிழமை இரவும் தொடர்ந்தது, 50 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மாநிலம் முழுவதும் சட்டவிரோத பந்தய வீரர்கள் அடிக்கடி செல்லும் பகுதிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் மற்ற சாலைப் பயணிகளுக்கு ஆபத்தை விளைவிப்பதாலும், இயந்திரங்கள் அதிக அளவில் மாற்றியமைக்கப்பட்டு, சைலன்சர்கள் அகற்றப்பட்டு, மற்றவர்களுக்கு இடையூறாக இருப்பதாலும், இந்த காவல்துறை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பினாங்கு காவல்துறை, அவர்களின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் ஏழு அதிகாரிகள் மற்றும் 64 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
50 மோட்டார் சைக்கிள்களைக் கைப்பற்றிய பொலிசார், ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியதற்காக அல்லது பந்தயத்தில் ஈடுபட்டதற்காக நான்கு பேரை கைது செய்தனர்.
பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக மொத்தம் 230 அபராதங்கள் அனுப்பப்பட்டன. இவ்வாறான நடவடிக்கைகள் தொடரும் என போலிஸார் மேலும் தெரிவித்தனர்.
-fmt