வரலாற்று சிறப்புமிக்க சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கியதற்கு இந்தியாவிற்கு அன்வார் வாழ்த்து தெரிவித்தார்

இந்திய விண்கலமான சந்திரயான்-3 நிலவின் தென் துருவப் பகுதியில் நேற்று வெற்றிகரமாகத் தரையிறங்கியதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு அன்வார் இப்ராகிம் வாழ்த்து தெரிவித்தார்.

இன்று ஒரு முகநூல் பதிவில், பிரதமர்  இது ஆசியாவிற்கும் கிடைத்த வெற்றி என்றும் வர்ணித்தார்.

“இந்தியா இப்போது சந்திரனை வென்றுள்ளது, இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஆசியா மற்றும் அதன் அனைத்து குடிமக்களுக்கும் கிடைத்த வெற்றியாக நான் கருதுகிறேன்”.

“இந்தச் சாதனையில் மலேசியாவும் பெருமை கொள்கிறது, இது தெளிவாக ‘ஆசிய நூற்றாண்டு’. வாழ்த்துகள், இந்தியா!” என்று பதிவிட்டார்.

நிலவின் தென் துருவப் பகுதியைத் தொட்ட முதல் நாடு என்ற சாதனையைப் படைத்தது இந்தியா.

சந்திரயான் – 3 ஜூலை 14  அன்று நிலவுக்கு ஏவப்பட்டது.