ஒரு வாடிக்கையாளருக்கு 100 கிலோ மட்டுமே உள்ளூர் வெள்ளை அரிசி விற்பனை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது.
விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் நெல் மற்றும் அரிசி ஒழுங்குமுறைப் பிரிவின் இயக்குநர் ஜெனரல் அஸ்மான் மஹ்மூத், அரிசி விநியோக சந்தையில் ஏற்படும் இடையூறுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
சில வர்த்தகர்கள் உள்ளூர் வெள்ளை அரிசியை 7,000 கிலோகிராம் வரை கொள்வனவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
“அதனால்தான் நாங்கள் இன்று முதல் இந்த கட்டுப்பாட்டை அமல்படுத்துகிறோம்,” என்று அவர் மலேசிய விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
-fmt