சபாவின் உள்ளூர் அரிசியை, விலைக் கட்டுப்பாட்டுப் பட்டியலில் சேர்க்க அமைச்சகம் முன்மொழிகிறது

சபாவில் உள்ள உள்ளூர் அரிசியை அங்குள்ள மக்களுக்கு உதவுவதற்காக விலைக் கட்டுப்பாட்டு பட்டியலில் வைக்க வேண்டும் என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

வேளாண் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் முகமட் சாபு மற்றும் சபாவின் முதலமைச்சர் ஹாஜி நூர் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று தான் இந்தக் கோரிக்கையைச் சமர்ப்பித்ததாக அமைச்சர் அர்மஜன் முகமது அலி கூறினார்.

“சபாவில் உள்ள உள்ளூர் அரிசி விலைகளை விலைக் கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்க்கலாம் என்பதற்காக, வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகம் சபா அரசாங்கத்துடன் உரிய திருத்தங்களை விவாதிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.”

உள்ளூர் வெள்ளை அரிசியை மூவலந்தீவிலிருந்து சபாவுக்கு கொண்டு வருவது குறித்து நாம் பரிசீலனை செய்ய வேண்டும். அப்போதுதான் இப்பகுதியில் உள்ள மக்கள் உள்ளூர் வெள்ளை அரிசி மூலம் குறைந்த விலையிலிருந்து பயனடைய முடியும் என்று அவர் கூறினார்.

நிலைமையை விளக்கிய ஆர்மிசான், உள்ளூர் அரிசி விலைக் கட்டுப்பாடு நெல் மற்றும் அரிசி ஒழுங்குமுறைப் பிரிவின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றார்.

இந்த விஷயம் நெல் மற்றும் அரிசி கட்டுப்பாடு சட்டம் 1994 (சட்டம் 522), அரிசி ஒழுங்கு (தரம் மற்றும் விலை கட்டுப்பாடு) (திருத்தம்) எண் 5 2008-க்கு குறிப்பிடப்பட்டுள்ளது – அதே சமயம் சபாவில் உள்ள உள்ளூர் வெள்ளை அரிசி விலை நிர்ணயம் ஒருபோதும் விலை கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

சபாவில் உள்ள அரிசி தொழில் தீபகற்பத்தில் உள்ளதை விடச் சற்றே வித்தியாசமானது, எடுத்துக்காட்டாக, அரிசி ஆலைகளின் திறன் மற்றும் சபாவில் உற்பத்தியாளர்களின் செயல்திறன் மற்றும் போட்டித்திறன் தீபகற்பத்தை விடக் குறைவாக உள்ளது என்று அர்மிசான் மேலும் கூறினார்.

இதற்கிடையில், அத்தியாவசிய பொருட்களின் கடுமையான விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக நாடு முழுவதும் உள்ள தொகுதிகளில் மாதம் இருமுறை ரஹ்மா விற்பனையை நடத்த அமைச்சகம் முயற்சித்து வருவதாக அர்மிசான் கூறினார்.