சரவாக் புதிய கட்டிடங்களுக்கான உயர வரம்புகளை உருவாக்குகிறது

சரவாக் அரசாங்கம், மாநிலத்தில் உள்ள ரியல் எஸ்டேட் டெவலப்பர்களை green building index (GBI) அடிப்படையில் கட்டிடங்களைக் கட்ட ஊக்குவிக்கிறது என்று பிரதமர் அபாங் ஜொஹாரி ஓபன் கூறுகிறார்.

இவ்வாறு செய்வதன் மூலம் நகர திட்டமிடலில் கட்டிடங்களின் மதிப்பு அதிகரித்து மக்களுக்கு ஏற்றச் சூழல் உருவாகும் என்றார்.

“மிகவும் இடுக்கமாக இல்லாத ஆனால் பரவலான நகரமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். குறிப்பிட்ட சில உயரங்களை (கட்டிடத்தின்) மற்றும் குறிப்பிட்ட பகுதியில் போக்குவரத்து ஓட்டத்தின் அடிப்படையில் நாம் கட்டுப்படுத்த வேண்டும்,” என்று அவர் ஒரு இரவு விருந்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது கூறினார். ஆசியான் மதிப்பீட்டாளர்கள் சங்கத்தின் (AVA) 25வது மாநாடு நேற்று நடைபெற்றது.

திட்டமிடலை மாற்றுவதற்கும், ஆசியான் நகரங்களுக்குள் உள்ள சொத்துக்களின் மதிப்பை அளவிடுவதற்கும் புதிய யோசனைகள் மற்றும் வழிமுறைகளைச் சேகரிக்க மதிப்பீட்டாளர்களுக்கு இந்த மாநாடு ஒரு நல்ல தளமாக இருக்கும் என்றார்.

“சொத்துகளின் மதிப்பை மதிப்பிடுவதில் ஆசியான் ஒரு பொதுவான வழிமுறையைக் கொண்டிருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று அவர் கருத்து தெரிவித்தார்.

சரவாக்கில், குறிப்பாகக் கூச்சிங் பகுதியில், நட்பு நகரமாக மாறுவதை உறுதிசெய்ய நிலையான திட்டமிடல் நடைமுறைகள் பயன்படுத்தப்பட்டன என்று அபாங் ஜோஹாரி சுட்டிக்காட்டினார்.

“உங்களிடம் ஒரு நல்ல இடம் இருந்தும் சூழல் உகந்ததாக இல்லாவிட்டால், நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு விலை இருக்காது,” என்று அவர் மேலும் கூறினார்.

ஸ்மார்ட் நகரங்களை நிறுவுவதற்கு கோவிட்-க்கு பிந்தைய வளர்ச்சி வியூகம் 2030 இன் அடிப்படையில் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளித்துப் பசுமைப் பொருளாதாரத்தை சரவாக் செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.