கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 14) கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA) பிஸ்கட் டின்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4.6 கிலோ எடையுள்ள ரிம 918,000 மதிப்புள்ள கோகோயின் கடத்தும் முயற்சியைச் சுங்கத்துறை முறியடித்துள்ளது.
சுங்கத் துறை அமலாக்க நடவடிக்கை இயக்குனர் வோங் பன் சியான், எத்தியோப்பியாவிலிருந்து நாட்டிற்கு வந்த 41 வயதான பெண்ணின் சாமான்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள மூன்று பிஸ்கட் டின்களில் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறினார்,
பெண்ணுக்குச் சொந்தமான சாமான்களின் ஸ்கேனிங் செயல்பாட்டின்போது போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
“ஸ்கேனிங் இயந்திரம் சந்தேகத்திற்கிடமான தோற்றமுடைய பச்சை நிற பொருள்கள் மற்றும் படங்களைப் பெண்ணின் சாமான்களில் கண்டறிந்தது”.
“முழு பரிசோதனைக்குப் பிறகு, அலுமினிய பிஸ்கட் டீன்ஸில் கோகோயின் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் ஒரு வெள்ளை நிறத்தைக் கொண்ட 211 காப்ஸ்யூல்கள் நாங்கள் கண்டுபிடித்தோம்,” என்று அவர் கூறினார்.
1952-ஆம் ஆண்டின் ஆபத்தான மருந்துச் சட்டம் பிரிவு 39B-ன் கீழ் இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
23,000 போதைக்கு அடிமையானவர்களுக்கு போதைப்பொருள் வழங்கப்படுவதை இந்தக் கைப்பற்றல் தடுக்கிறது என்று வோங் மேலும் கூறினார்.