2024 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெறும் பிரபல கிரிக்கெட் தொடர்

2024ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

போட்டிகள் 2024 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 4 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

15வது இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 16 அணிகள் 4 பிரிவுகளின் கீழ் போட்டியிடுகின்றன.

இத்தொடரில், போட்டித் தொடரை நடத்தும் இலங்கை அணி C குழுவின் கீழ் போட்டியிடும் நிலையில், C குழுவின் ஏனைய அணிகளாக அவுஸ்திரேலியா, சிம்பாப்வே மற்றும் நமீபியா அணிகள் பெயரிடப்பட்டுள்ளன.

போட்டி அட்டவணை மேலே காட்டப்பட்டுள்ளது.

 

 

-an