நாட்டின் சாலை விதிகளை மீறும் லாரி மற்றும் டிரெய்லர் ஓட்டுனர்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே போதுமான அளவு கடுமையாக உள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இன்று வலியுறுத்தினார்.
“சாலைப் போக்குவரத்துத் துறையால், குறிப்பாக அதிக சுமைகளை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு எதிராக, அமலாக்கம் தொடர்ச்சியாகவும் கடுமையாகவும் மேற்கொள்ளப்படுகிறது. சமீபகாலமாக நடக்கும் விபத்துகள்குறித்து பொதுமக்களின் கவலையை அறிந்து, தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுப்போம்”.
“நடவடிக்கைகள் கடுமையானவை அல்ல என்று பலர் கூறுகின்றனர், ஆனால் தற்போதுள்ள விதிமுறைகளுக்குள், நடவடிக்கைகள் மற்றும் சட்டங்கள் போதுமான அளவு கடுமையாக உள்ளன. அவர்கள் அதிக சுமை ஏற்றிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்யலாம், ”என்று அவர் Career@Transportation Programme திட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
தொழில்துறை தேவைகள் மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்த இன்னும் விரிவான அணுகுமுறை செயல்படுத்தப்படுவதை அமைச்சகம் எப்போதும் உறுதி செய்கிறது என்று லோக் கூறினார்.
இன்றைய நிகழ்ச்சித் திட்டம்குறித்து லோக் கருத்துத் தெரிவிக்கையில், விமானம், தரை மற்றும் கடல்சார் துறைகளை உள்ளடக்கிய போக்குவரத்துத் துறையில் 2,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இளங்கலை பட்டங்கள், டிப்ளோமாக்கள், சிஜில் பெலஜரன் மலேசியா மற்றும் திறன் சான்றிதழ்களுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் AEON Nilai இல் இரண்டு நாள் திட்டத்திலிருந்து பயனடைய வாய்ப்பு உள்ளது.
“இந்த அணுகுமுறை போக்குவரத்து துறையில் வேலை வாய்ப்புகளைப் பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.எங்களுக்கு நிச்சயமாக அதிகமான தொழிலாளர்கள் தேவை, குறிப்பாகக் கிள்ளான் பள்ளத்தாக்கில் பேருந்து மற்றும் ரயில் ஓட்டுநர்கள்”.
“பேருந்து ஓட்டுநர்களைப் பொறுத்தவரை, அவர்களை மிகவும் திறமையானவர்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். கவர்ச்சிகரமான அலவன்ஸ் மற்றும் சம்பளம் வழங்கப்படுகிறது,” என்றார்.
இதில் Prasarana Malaysia Bhd, Express Rail Link Sdn Bhd, Keretapi Tanah Melayu Berhad, Malaysia Rail Link, Malaysia Airports Holding Berhad, Air Asia, Batik Air, MYAirline Sdn Bhd, Ground Team Red மற்றும் Malaysia Aviation Group ஆகியவை அடங்கும்.