அனிஸ் ரிசானா முகமட் ஜைனுடின், ராயல் மலேசியன் சுங்கத் துறையின் முதல் பெண் இயக்குநர் ஜெனரலாகப் பொறுப்பேற்று வரலாறு படைத்தார்.
அவரது நியமனம் இன்று (செப்டம்பர் 25) அமலுக்கு வருவதாக, அரசின் தலைமைச் செயலாளர் முகமட் ஜூகி அலி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
54 வயதான அனிஸ் ரிசானா, நிதியமைச்சின் திறைசேரியின் (முதலீடு) பிரதிச் செயலாளராக இருந்தவர், முதலீடு, இறக்குமதி-ஏற்றுமதி, ஆராய்ச்சி மற்றும் கொள்கை மேம்பாடு, பொருளாதாரம், மேலாண்மை மற்றும் நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவான அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
அவர் ஓய்வு பெற்ற ஜாசுலி ஜோஹனுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்
“ராயல் மலேசியன் சுங்கத் துறையின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்ற பெண் அரசுப் பணியாளருக்கான முதல் நியமனம் இதுவாகும்.
“அனிஸ் ரிசானா தனது அனுபவத்துடனும் நம்பகத்தன்மையுடனும் அரசாங்கத்திற்கு வருமானம் ஈட்டுவதில் மிகவும் முக்கியமான ஒரு நிறுவனத்தை வழிநடத்த முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று மொஹமட் ஸுகி கூறினார்.
அனிஸ் ரிசானா (மேலே) 1994 இல் நிதி அமைச்சின் நிதிப் பிரிவின் உதவிச் செயலாளராக 29 வருடங்களாகச் சிவில் சேவையில் இருந்துள்ளார்.
அமெரிக்காவின் வெஸ்டர்ன் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில்(Western Michigan University) வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் பட்டமும், யுனிவர்சிட்டி புத்ரா மலேசியாவில்(Universiti Putra Malaysia) வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
இதற்கிடையில், முகமட் ஜூகி, குறிப்பாகச் சுங்கத் தலைமை இயக்குநராக இருந்த காலத்தில், பொதுச் சேவைக்கான அவரது சேவை மற்றும் அர்ப்பணிப்புக்காக, ஜாசுலிக்கு (Zazuli) அரசாங்கத்தின் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தார்.