அரசு சொத்துக்களை தவறாக பயன்படுத்தியது குறித்து விசாரணை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் – வான் ரோஸ்டி

பகாங் பாரிசான் நேஷனல், பெலங்கை இடைத்தேர்தலுக்கு முன்னதாக மாநில அரசாங்கத்தின் சொத்துக்கள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தால் விசாரிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.

பகாங் பாரிசான் நேஷனல் தலைவர் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில், எதிர்க்கட்சிகளால் கூறப்பட்ட இத்தகைய குற்றச்சாட்டுகள் புதியவை அல்ல என கூறியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

“இதைத்தான் பெரிக்காத்தான் ஒவ்வொரு முறையும் தேர்தல் நடக்கும் போது, அவதூறு பரப்புகிறார்கள், பொய்யான கூற்றுகளைச் செய்கிறார்கள்,” என்று பகாங் மந்திரி பெசாராகவும் இருக்கும் வான் ரோஸ்டி மேற்கோள் காட்டினார்.

நான்கு பாரிசான் நேஷனல் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சிக்குத் தாவ விரும்புவதாக நேற்று பெரிக்காத்தான் நேஷனல் கூறியதாக வான் ரோஸ்டி கூறினார், அந்தக் குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டது.

“எனவே, அரசாங்கத்தின் மீதான துஷ்பிரயோகம் என்ற கூற்று வெறும் பொய். ஆனால் அது அவர்களின் பொறுப்பு என்பதால் விசாரணையை தேர்தல் ஆணையத்திடம் விட்டுவிடுகிறேன்.

மாநில அரசாங்கத்தின் சொத்துக்கள் மற்றும் கட்சி மையங்களின் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்க்கு க்கு பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் விடுத்த அழைப்பு குறித்து அவர் கருத்துத் தெரிவித்தார்.

துவான் இப்ராஹிம் பிரச்சாரத்தின் போது பாரிசான் நேஷனல் “ஊக்குவிப்புகளை” வழங்கியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

பெலங்கை இடைத்தேர்தல் பாரிசான் நேஷனல் அமிசார் அபு ஆதம், பெரிக்காத்தான் நேஷனல் காசிம் சமத் மற்றும் சுயேச்சை வேட்பாளர் ஹஸ்லிஹெல்மி டிஎம் சுல்ஹஸ்னி ஆகியோருக்கு இடையே மும்முனைப் போட்டியைக் காணும்.

ஆகஸ்ட் மாதம் அம்னோவைச் சேர்ந்த அதன் சட்டமன்ற உறுப்பினர் ஜோஹாரி ஹருன் இறந்ததைத் தொடர்ந்து மாநில இருக்கை காலியானது.

 

 

-fmt