கடனைக் கட்டுப்படுத்த உதவும் புதிய நிதிநிலைப் பொறுப்புடைமைச் சட்டம்

பொது நிதி மற்றும் நிதிப் பொறுப்பு மசோதா 2023 நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது, இது மேக்ரோ பொருளாதார நிலைத்தன்மை, கடனைக் குறைத்தல் மற்றும் விவேகமான நிதி இடர் மேலாண்மை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.

துணை நிதியமைச்சர் ஐ அஹ்மட் மஸ்லான், இந்த மசோதா இன்று இரண்டாவது வாசிப்புக்கு வைக்கப்படும் என்றும், அரசாங்கத்தின் திட்டங்கள்பற்றிய கூடுதல் விவரங்கள் இந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் 2024 இல் விவரிக்கப்படும் என்றும் கூறினார்.

அரசாங்கத்தின் நோக்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் மூன்று சதவிகிதம் வருடாந்திர வளர்ச்சி செலவினத்தை இலக்காகக் கொண்டது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவான வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை இலக்காகக் கொண்டது என்றார்.

இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதத்திற்கும் குறைவாகவும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் கடனை அடைக்க அரசாங்கத்தை அனுமதிக்கும் என்று அவர் விளக்கினார்.

பிரதமர் அன்வார் இப்ராகிம் பிப்ரவரியில் தனது பட்ஜெட் உரையின்போது 2022 இறுதியில் GDP க்கு 81 சதவிகிதம் என்று கூறினார்.

“நாட்டின் நிதி மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கு இந்த மசோதா முக்கியமானது,” என்று அஹ்மட் நேற்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார் என்று பெர்னாமா தெரிவித்துள்ளது.

புதிய சட்டத்தை வலியுறுத்துவதன் மூலம் நிதியமைச்சகம் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் தன்மையை மேம்படுத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புத்ராஜெயா நிதி அறிக்கையிடலில் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் மற்றும் அதிக அளவில் அறிக்கை செய்ய நிர்ப்பந்திக்கவும்  சட்டம் கோருகிறது.

“பொறுப்பான நிதி நிர்வாகக் கொள்கைகளுக்கு ஏற்ப நிதிக் கொள்கைகள் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய நிதிக் கொள்கைக் குழுவின் செயல்பாடு மற்றும் பங்கு பலப்படுத்தப்படும்,” என்று அவர் கூறினார்.

மத்திய கால வருவாய் உத்தி, பொது செலவினங்களை மதிப்பாய்வு செய்தல் மற்றும் நீண்டகால நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக அரசு கொள்முதல் சட்டத்தை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட நிதி புதுப்பித்தல் முயற்சிகளையும் அரசாங்கம் தொடரும் என்று அஹ்மட் மேலும் கூறினார்.