போலீஸ்காரரின் ரிம 4 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் கைகடிகாரம் – எப்படி வந்தது?

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறை அதிகாரியான தனது கணவரின் ஆடம்பர ரோலக்ஸ் கைக்கடிகாரங்களை திருடியதாக 41 வயது இல்லத்தரசி ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

இது சார்பாக கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் (படம்) , காவல்துறை இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

குற்றப்பத்திரிகையின்படி, தொடர் எண் 0890R359 கொண்ட ரோலக்ஸ் ஸ்கை-டுவெல்லர் (மாடல் 326135) மற்றும் தொடர் எண் A9R56702 கொண்ட ரோலக்ஸ் GMT மாஸ்டர்-II 9 (மாடல் 116718 LN) ஆகியவற்றைத் திருடியதாக அந்த பெண் மீது குற்றம் சாட்டப்பட்டது.

“திருடப்பட்ட கைக்கடிகாரங்களின் மதிப்பிடப்பட்ட விலை ஸ்கை டிவெல்லருக்கு RM207,000 மற்றும் GMT Master-II 9 க்கு RM198,000 ஆகும்.

“இந்த வழக்கை நாம் இன்னும் கூர்ந்து கவனித்தால், ஒரு போலீஸ் அதிகாரி எப்படி நூறாயிரக்கணக்கான ரிங்கிட் விலையில் ஆடம்பர பொருட்களை வாங்க முடிகிறது என்ற கேள்வி எழுகிறது.” என்கிறார்  லிம் கேட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட பெண் (Mou Ei Leen) குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

ஜனவரி 2021 இல் ஈப்போவில் உள்ள பிங்கிரான் ராபட் ரியாவில் உள்ள ஒரு வீட்டில் இந்தக் குற்றம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

“காவல்துறையினரின் வருமானம் இன்னும் பழைய நிலையில் தான்  உள்ளது என்று சமீபத்தில் எங்களிடம் கூறப்பட்டது” என்று லிம் கூறினார்.

அன்மையில் அவ்வளவு அதிகமாக பெறும் சம்பளம் பெரும் நிலையில்  இல்லை என்று கூறிய ஐஜிபி ரஸாருதீன் ஹுசைன், காவல்துறையின் சம்பள விகிதத்தை மாற்றியமைக்க அழைப்பு விடுத்தார்.

எனவே, அந்த இரண்டு ரோலக்ஸ் கைக்கடிகாரங்களையும் காவல்துறை அதிகாரி எப்படிப் பெற்றார் என்பதை பொதுமக்களுக்கு விளக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பாகும் என்றார் லிம்.

“அவர் போலீஸ்காரராகப் பெற்ற சம்பளத்தில் வாங்கப்பட்டதா அல்லது வேறு வழிகளில் இவை  வாங்கப்பட்டதா?” இந்த வினாக்களுக்கு விடை தேவை.