பாஸ் மாநாடு | முஸ்லீம் அல்லாத வாக்காளர்களை கவர விரும்பினால், மலேசியாவை மதச்சார்பற்ற நாடாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங்கின் முன்மொழிவை பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் நிராகரித்தார்.
துவான் இப்ராஹிம், டிஏபியின் தேர்தல் அறிக்கையானது, “மலேசியாவை மதச்சார்பற்ற நாடாக உருவாக்கப் போராடுவது” என்ற கட்சியின் குறிக்கோளைக் குறிக்கிறது என்றும், லிம் கூறியது போல் மலேசியா ஒரு மதச்சார்பற்ற நாடு அல்ல எனவேதான் அந்த போராட்டாம் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என்றும் கூறினார்.
“மலேசியா ஒரு மதச்சார்பற்ற நாடு அல்ல. அப்படி இருந்தால், டிஏபி தனது சொந்த அறிக்கையில் ‘மதச்சார்பற்ற நாட்டிற்காக போராட வேண்டும்’ என்பதை ஏன் சேர்க்க வேண்டும்? என்றும் வினவுகிறார்.
“கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ மதம் இஸ்லாம். பிறகு மலேசிய மலேசியா என்ற எண்ணம் உள்ளது. சமத்துவம் அல்லது அனைவரும் சமம் என்ற கருத்தை எந்த மலாய்க்காரர்களும் ஏற்க முடியாது” என்று இன்று ஐடிசிசி ஷா ஆலமில் நடைபெற்ற PAS முக்தமரின் (ஆண்டுப் பொதுக் கூட்டம்) செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
இனவாதமும் மதவாதமும் இணைந்த நிலையில், முன்னணி வலதுசாரி தன்மைகள் கொண்ட விவாதங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் நோக்கம், பெரிக்காத்தான் மற்றும் பாஸ் கட்சி அடுத்த தேர்தலில் நாட்டின் ஆட்சியை கைபற்றுவதாகும்.
அன்வாரின் பல்லின அரசியல் வழிமுறைக்கு சவாலாக அமையும் இந்த நிலைப்பாடு, ஒரு இயல்பான நாட்டு மக்களின் ஒற்றுமை உணர்வுக்கு மிரட்டலாகவே அமையும்.