பாலஸ்தீனத்திற்கு ரிம 7மில்லியன் மதிப்புள்ள 50 டன் பொருட்கள் அனுப்பப்படும்

Ops Ihsan எனப் பெயரிடப்பட்ட நன்கொடை இயக்கத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட சுமார் 50 டன்கள்  ரிம 7 மில்லியன் மதிப்புள்ள மனிதாபிமான பொருட்கள் இந்த வெள்ளியன்று எகிப்து வழியாகப் பாலஸ்தீனத்திற்கு அனுப்பப்படும்.

எகிப்து வழியாக அனுப்பப்படும் பொருட்களில் மருந்துகள், குழந்தைகளுக்கான பொருட்கள், போர்வைகள் மற்றும் உணவு ஆகியவை அடங்கும்.

மனிதாபிமான உதவியானது மலேசிய இஸ்லாமிய அமைப்புகளின் ஆலோசனை கவுன்சில் (Mapim) மற்றும் குளோபல் பீஸ் மிஷன் (GPM) மலேசியா உட்பட பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் ஒருங்கிணைக்கப்பட்டது என்றார்.

எகிப்தில் உள்ள ரஃபா எல்லை வாயில் வழியாக நன்கொடைகளை அனுப்ப எகிப்திய அரசாங்கத்தின் அனுமதிக்காக அவர்கள் இப்போது காத்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.

“அது ரஃபா எல்லை வாயிலை அடையும்போது, பாலஸ்தீனத்தில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு இந்த உதவி சென்றடைவதை உறுதிசெய்ய அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் ஒருங்கிணைக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

நயிம் (மேலே) சிலாங்கூர், செபாங்கில் உள்ள மாபிம் கிடங்கில் உள்ள பாலஸ்தீனிய மனிதாபிமான பொருட்கள் சேகரிப்பு மையத்தை இன்று பார்வையிட்டபின்னர் ஊடகங்களிடம் பேசினார்.

இந்தப் பயணத்தின்போது, பாலஸ்தீனியர்களுக்கு மருத்துவ பொருட்களை வாங்குவதற்காக லெம்பகா தபுங் ஹாஜி அளித்த ரிம 100,000 என்ற மாதிரி காசோலையை அவர் வழங்கினார்.

காசாவில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய ஆட்சிக்கு இடையே அக்டோபர் 7 முதல் நடந்த சண்டை இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்துள்ளது.