மீண்டும் கூட்டாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிப்போம் என்ற பாஸ் கட்சியின் கூற்று, பெர்சத்து மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் “சகோதரனாக” செயல்படுவதை நிறுத்துவதற்கான எச்சரிக்கையாகும் என்று அம்னோ தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
முகைதின் தலைமையிலான கூட்டணி உள் பிரச்சனைகளை எதிர்கொள்கிறது என்பதைக் காட்டுவதாக பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் இவ்வாறு ங்கூறி இருக்கலாம் என்று அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினர் புவாட் சர்காஷி கூறினார்.
முகைதினுக்குப் பதிலாக, இஸ்லாமியக் கட்சி தலைமையிலான நான்கு மாநிலங்களுக்கு ஆலோசகராக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை நியமிப்பதற்கான பாஸ்-ன் முடிவினால் பெரிக்காத்தானுக்குள் உள்ள பிரச்சினைகள் தோன்றக்கூடும்.
“பெர்சத்துவின் குவாலா பெர்லிஸ் சட்டமன்ற உறுப்பினர் (அபு பக்கர் ஹம்சா) பெர்லிஸில் அமைதியின்மை இருப்பதாகக் கூறுவது, உண்மையில், மாநிலத்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பான பெரிக்காத்தானுக்குள் உள்ள உள் பூசல் ஆகும்.
“43 இடங்களைக் கொண்ட பாஸ், இந்த அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியும் என்று துவான் இப்ராஹிம், 18 நாடாளுமன்ற இடங்களைக் கொண்ட பெர்சத்துவைக் கேலி செய்தார்.
“பாஸ் இல்லாவிட்டால், பெர்சத்து இப்போது வைத்திருக்கும் நாடாளுமன்ற இடங்களை வென்றிருக்க மாட்டார்கள்” என்று புவாட் செய்தியாளர்களிடம் கூறினார்.
இருப்பினும், புத்ராஜெயாவில் இருக்க வேண்டும் என்ற பாஸ் இன் விருப்பம் ஒரு “பகல் கனவு” என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்று தன நம்புதவாகவும் , ஏனெனில் அது இஸ்லாமியக் கட்சி ஐக்கிய அரசாங்கத்தில் சேர வேண்டும் என்று அர்த்தம் என்று அவர் தெரிவித்தார்.
“வேறு வழியில்லை. பாஸ் அரசாங்கமாக மாறுவதற்கு அனைத்து கபுங்கன் பார்ட்டி சரவாக் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும், அதே போல் பாரிசான் நேசனல் அல்லது பக்காத்தான் ஹராப்பான் இன் குறைந்தபட்சம் 10 எம்.பி.க்கள் தங்கள் கட்சிகளில் இருந்து விளக்க வேண்டும் மற்றும் அவர்களின் இடங்களுக்கு மீண்டும் போட்டி நடத்தப்பட வேண்டும். “இது அரசியல் தற்கொலை” என்று ரெங்கிட்டின் ஜொகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.
இதற்கிடையில், மலாக்கா டிஏபி துணைத் தலைவர் கூ போய் தியோங் கூறுகையில், துவான் இப்ராஹிமின் கருத்துக்கள் கடந்த ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது பின் பிஎன் ஆதரவாளர்கள் மற்றும் எம்.பி.க்களின் மன உறுதியை அதிகரிக்கச் செய்யும் என்று கூறினார்.
பெர்சத்துவின் குவாலா கங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்கந்தர் துல்கர்னைன், தனது தொகுதியில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களைக் கருத்தில் கொண்டு அன்வார் இப்ராஹிமின் தலைமைக்கு தனது ஆதரவை அறிவித்ததை அவர் உதாரணம் காட்டினார்.
“பாஸ் அதன் எம்.பி.க்கள் பக்கம் மாறுவார்கள் என்று அதிகமாக கவலைப்படுகிறார்கள், அதனால்தான் துவான் இப்ராஹிம் அந்த கருத்துக்களை தெரிவித்தார்” என்று கோட்டா மலாக்கா எம்.பி கூறினார்.
-fmt