முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நஜிப் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவரது உதவியாளர் முஹம்மது முக்லிஸ் மக்ரிபி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நஜிப் நிலையான நிலையில் இருப்பதாகவும், தனிமைப்படுத்தலில் இருப்பதாகவும் முக்லிஸ் கூறினார்.
நஜிப் காஜாங் சிறையில் 12 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் ஊழல், குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் அரசுக்குச் சொந்தமான SRC International Sdn Bhd இலிருந்து ரிம42 மில்லியனை உள்ளடக்கிய பணமோசடி ஆகியவற்றில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார்.
நஜிப் சிகிச்சை பெறுவதை உறுதி செய்வதில் உடனடியாகப் பதிலளித்ததற்காகச் சிறை மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்,
நஜிப் மருத்துவமனையில் இருப்பதை சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், மேலும் விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார்.
“என்ன நடந்தது, என்ன சிகிச்சை, என்ன நோய் என்பது மிகவும் ரகசியமானது”.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்த விடயம் தொடர்பில் வினவியபோது, ”நான் அதை இங்கு வெளியிட முடியாது. அவ்வளவுதான் என்னால் கூற முடியும்,” என அவர் தெரிவித்தார்.