அவதூறு: ஜாகிருக்கு ரிம1 மில்லியனுக்கு மேல் கொடுக்க ராமசாமிக்கு நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமிய போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கை அவதூறு செய்ததற்காக ரிம1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்குமாறு பினாங்கு முன்னாள் துணை முதல்வர் பி ராமசாமிக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று காலை அந்த முன்னாள் DAP உறுப்பினருக்கு எதிராக இந்தியப் பிரஜையின் இரண்டு சிவில் நடவடிக்கைகளை அனுமதித்தது, இதன் விளைவாக மொத்தமாக ரிம1.45 மில்லியன் இழப்பீடு  ஏற்பட்டது.

2019 ஆம் ஆண்டில், ஜாகிர் (மேலே, வலது புறம்)தனது  மீதான ராமசாமியின் பகிரங்க அறிக்கைகள் தொடர்பாக இரண்டு தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்தார்: ஒன்று ஆகஸ்ட் 8, 2019 அன்று கிளந்தான், கோத்தா பாருவில் ஜகிரின்  சர்ச்சைக்குரிய செராமாவுடன் தொடர்புடையது;மற்றும் 2019 ஆம் ஆண்டு ,  முன்னாள் போராளிக் குழுவான ஈழ விடுதலைப் புலிகளை (Liberation Tamil Tigers of Eelam) புதுபிக்க ர் பெறுவதற்கான முயற்சிகளுடன் தொடர்புடையது.

இன்று நீதிமன்ற விசாரணையின்போது, ​​நீதிபதி ஹயாத்துல் அக்மல் அப்துல் அஜீஸ், ராமசாமியின் ஐந்து பகிரங்க அறிக்கைகளில் ஜாகிரை அவதூறு செய்யும் மூன்று கூறுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பளித்தார்.

நியாயமான கருத்தைப் பாதுகாக்கும் உரிமையை ராமசாமி காட்டத் தவறிவிட்டார் என்று நீதிபதி கூறினார்.

“ஜாகிரை அவதூறாகப் பேசியதில் உண்மை அல்லது நியாயம் இருப்பதை  ராமசாமியால்  நிரூபிக்க முடியவில்லை ,” என்று ஹயாத்துல் கூறினார்.

நீதிபதி இன்று முதல் 30 நாட்களுக்குள் இழப்பீட்டு தொகையை  செலுத்த பிரதிவாதிக்கு உத்தரவிட்டார்.

ஜாகிரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஹயாதுல் ராமசாமிக்கு உத்தரவிட்டார்.

விசாரணையின் முடிவில், ராமசாமியின் வழக்கறிஞர் ரஸ்லான் ஹாத்ரி, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில், பிரதிவாதி ஜாகிரிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதன் அவசியத்தை நிறுத்துவதற்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.