மலேசிய மருத்துவ சங்கம் (MMA) இன்று மருத்துவர்களுக்கு வார இறுதி நாட்களில் அழைப்பு கடமைக்கான கொடுப்பனவை அதிகரிக்க மறுத்ததையடுத்து அதன் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது.
அதன் தலைவர் டாக்டர் அசிசான் அப்துல் அஜீஸ், சுகாதார அமைச்சகத்தின், தற்போதைய கொடுப்பனவு விகிதம் பொருத்தமானது என்பது மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை அவமதிப்பதாகக் கருதினார்.
அவரது கூற்றுப்படி, மருத்துவர்களுக்கு 24 மணி நேர வேலைக்காக ரிம220 வழங்கப்படுகிறது (வார இறுதி அழைப்பு பணிக்காக) இது ஒரு மணி நேரத்திற்கு ரிம 9.16 ஆகும்.
“நாட்டில் மருத்துவர்களைவிட அதிக மணிநேர ஊதியம் பெறும் பணியாளர்கள் உள்ளனர் என்பது அரசாங்கத்திற்குத் தெரியுமா?”
“அரசாங்கத்தின் விளக்கத்திற்கு மாறாக, மருத்துவர் பணியில் இல்லாத நேரம் தவிர்த்து 24 மணி நேர வேலைகளுக்கு இந்தத் தொகை வழங்கப்படுகிறது, எனவே ரிம220, 24 மணி நேரம் பிரிக்கப்பட வேண்டும்,”என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
அசிசான் (மேலே) நேற்று ஒரு செய்தி அறிக்கைக்குப் பதிலளித்தார், மருத்துவர்களின் வார இறுதி அழைப்பு கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும் என்ற சங்கத்தின் கோரிக்கையைச் சுகாதார அமைச்சகம் நிராகரித்துவிட்டது என்று கூறினார்.
பிரீ மலேசியா டுடே செய்தியின்படி, இரண்டு வாரங்களுக்கு முன்பு MMA க்கு எழுதிய கடிதத்தில் அமைச்சகம் அழைப்பை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.
மருத்துவர்கள் அனுபவிக்கும் பல கொடுப்பனவுகளையும் அமைச்சகம் பட்டியலிட்டதாகக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், சுகாதார அமைச்சகம் தவறான தகவல்களை மேற்கோள் காட்டியுள்ளது, இது தவறான பொது உணர்வை உருவாக்கியது என்று அசிசான் கூறினார்.
பல்வேறு கொடுப்பனவுகளுக்கான உரிமை மருத்துவரின் நிலை மற்றும் தரத்தைப் பொறுத்தது, அதாவது அமைச்சகம் கூறியது போல் பெரும்பாலான மருத்துவர்கள் அத்தகைய கொடுப்பனவுகளைப் பெற மாட்டார்கள் என்று அவர் கூறினார்.
“MMA க்கு அமைச்சின் எழுத்துப்பூர்வ பதிலிலிருந்து, முடிவெடுக்கும் நிலையில் உள்ளவர்களுக்குத் தெளிவான புரிதல் இல்லாமல் இருக்கலாம் அல்லது முன்மொழியப்பட்ட அதிகரிப்பு குறித்து முடிவெடுக்கத் தேவையான துல்லியமான தகவல்களைக் காணவில்லை என்று தோன்றுகிறது”.
“உண்மையில் துல்லியமான தகவலைக் குறிப்பிடாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தால், முன்மொழியப்பட்ட அழைப்பு கட்டண உயர்வு தொடர்பான அதன் முடிவை அரசாங்கம் மறு மதிப்பீடு செய்து மறுபரிசீலனை செய்யுமாறு நாங்கள் கோர விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
பொது சுகாதாரத்தில் மருத்துவர்கள் மத்தியில் உள்ள விரக்தியை இலகுவாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் MMA அரசாங்கத்திற்கு நினைவூட்டியது.
“பல மருத்துவர்கள் பெற்ற அனுபவங்களும், குறைந்த ஊதியத்துடன் இணைந்திருக்கும், தொடர்ச்சியான அழைப்புப் படி(on-call) போன்ற பிரச்சினைகள் மேலும் விரக்தியையும் வெளிநாடு செல்ல வழிவகுக்கும் கவலைகளை ஏற்படுத்தக்கூடும்.”
பொது சுகாதாரத்துறையில் உள்ள மருத்துவர்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அழைப்புப்படி உயர்வு எதையும் காணவில்லை. பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அழைப்பு கொடுப்பனவு (on-call) விகிதம் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று சங்கத் தலைவர் கூறினார்.