ஜெலி எம்.பி ஜஹாரி கெச்சிக், பிரதம மந்திரி அன்வார் இப்ராஹிமின் தலைமைக்கு, ஆதரவளிப்பதாக உறுதியளிக்கும் நான்காவது பெர்சத்து சட்டமியற்றுபவர் ஆனார்.
“மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை நான் உணர்கிறேன்”.
இந்தச் சவாலான காலகட்டத்தில், ஜெலி எம்.பி.யாக நான் மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்க வேண்டும் என இன்று மாலை அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அன்வாரை ஆதரிக்க எந்த வற்புறுத்தலோ அல்லது அழுத்தமோ இல்லை என்பதை தெளிவுபடுத்திய ஜஹாரி, தான் பெர்சத்துவுக்கு விசுவாசமாகவும் உறுதியாகவும் இருப்பேன் என்றார்.
குவாலா கங்சார் துல்கர்னைன் அப்துல் காலித், லாபுவான் (சுஹைலி அப்துல் ரஹ்மான்) மற்றும் குவா முசாங் (முகமது அசிசி அபு நைம்) ஆகியோருக்குப் பிறகு ஜஹாரி நான்காவது நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
இஸ்கந்தர் மற்றும் சுஹைலி இருவரும் கட்சியிலிருந்து முறையே நான்கு ஆண்டுகள் மற்றும் ஆறு ஆண்டுகளுக்குக் கட்சியின் ஒழுக்காற்று வாரியத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டதாகப் பெர்சாத்து பொதுச்செயலாளர் ஹம்சா ஜைனுடின் ஏற்கனவே இந்த வாரம் அறிவித்தார்.
இருவரும் கட்சிப் பதவிகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர்.
நான்கு பெர்சாத்து எம்.பி.க்களின் ஆதரவு, நாடாளுமன்றத்தில் அன்வாருடன் இணைந்த எம்.பி.க்களின் எண்ணிக்கையை 150 ஆகக் கொண்டு வருகிறது, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை விட மூன்று அதிகம்.