உயிரை பணையம் வைத்த ஒரு கணவரின் விரைவான நடவடிக்கை, இன்று பினாங்கு பயான் லெபாஸ் தாமான் புக்கிட் கெடுங்கில் உள்ள ஜாலான் தெங்கா பிளாட்ஸின் நான்காவது மாடியில், ஏற்பட்ட தீயில் எரிந்து கொண்டிருந்த அவரது மனைவியை இறப்பிலிருந்து காப்பாற்றியது.
60 வயதான லூ ஜூ ஹிங்கிற்கு 40% தீக்காயங்களும், 58 வயதான லிம் பெங் லேயின் உடலில் 80% தீக்காயங்களும் இருந்தன.
பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நடவடிக்கை அதிகாரி ஹிர்மன் மாட் ரோட்ஸி கூறுகையில், தீ விபத்து குறித்து தனது குழுவினருக்கு மதியம் 1.15 மணிக்கு பேரிடர் அழைப்பு வந்தது என்றார்.
“நாங்கள் வரும்போது, வீட்டில் உள்ள ஒரு அறை தீப்பிடித்து எரிவதைக் கண்டோம். தம்பதியினர் ஏற்கனவே வீட்டுக்கு வெளியே இருந்தனர், அவர்களின் முகம், கைகள் மற்றும் உடலில் கடுமையான தீக்காயங்கள் இருந்தன.
மதியம் 1.37 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
கணவரின் கூற்றுப்படி, அவர் தனது மாடிக்கு படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருந்தபோது, தனது வீட்டில் இருந்து புகை வெளியேறுவதைக் கண்டு தனது மனைவியைக் காப்பாற்ற ஓடினார் என்று ஹிர்மான் கூறினார்.
“அந்தப் பெண் அதிர்ச்சியில் இருந்ததால், கணவரின் விரைவான நடவடிக்கையே அவரது மனைவியை தீ மரணத்திலிருந்து காப்பாற்றியது.”
“கணவனின் முகம் மற்றும் கைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டன, மனைவிக்கு கிட்டத்தட்ட முழு உடலிலும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
“இருவரும் மேல் சிகிச்சைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்,” என்று அவர் கூறினார், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
FMT