தமிழ் மொழி விழாவில் தமிழ் வாழ்த்துப் பாடல்களுக்கு தடை – பிரதமர் தலையிட வேண்டும்

கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் மொழி விழாவில் இரண்டு பாரம்பரிய தமிழ் பாடல்களின் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் தடுக்கப்பட்டதை அடுத்து, பினாங்கு மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலைமையை கண்டித்து, மாநில கவுன்சிலர் சுந்தர்ராஜு சோமு மற்றும் பாகன் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் ஆகியோர், பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் ஆகியோர் தலையிட அழைப்பு விடுத்தனர்.

“பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் தலையிடுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், அப்பொழுதுதான்  உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் இது எதிர்காலத்தில் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்,” என்று அவர்கள் கூறினர்.

‘கடவுள் வாழ்த்து’ மற்றும் ‘தமிழ் வாழ்த்து பாடல்கள் நிகழ்சி நிரலில் இருந்து நீக்கப்பட்டன.

சுந்தரராஜும் குமரனும் இரண்டு பாடல்களையும் இந்திய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக விவரித்தனர், மேலும் அவை அனைத்து  இந்திய கலாச்சார அல்லது மொழியியல் நிகழ்விலும் உணர்வு பூர்வமாக அரங்கத்தில் பாடப்பாடுபவை.

திருவள்ளுவர் படம்

நேற்றிரவு பினாங்கில் நடைபெற்ற தேசிய தமிழ் மொழி திருவிழா 2023 இல் பாடல்கள் இசைக்கப்படுவதைத் தடைசெய்யும் கட்டளையை யார்  பிறப்பித்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மேலும் தமிழ் தத்துவ ஞானியான திருவள்ளுவர் இடம்பெறும் பதாகைகளும் இந்த நிகழ்வில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் இருப்பதாக சுந்தர்ராஜூம் குமரனும் தெரிவித்தனர்.

“இந்தத் தடைகளிள் நியாயமற்றவை, தமிழ் மொழியைக் கொண்டாடும் வகையில் கல்வி அமைச்சினால் நடத்தப்படும் தேசிய திருவிழாவில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடது, இதனால் நாங்கள் மிகவும் குழப்பமடைகிறோம்,” என்று இருவரும் இன்று கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.

இதுபோன்ற செயல்கள் மக்களை மேலும் பிளவுபடுத்தவே உதவும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பினாங்கின் தமிழ்ப் பள்ளிகளுக்கான சிறப்புக் குழுவின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் சுந்தர்ராஜு மற்றும் குமரன் ஆகியோர், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தக் கோரி மாநிலக் கல்வித் துறையையும் தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

மலேசியாகினி கருத்துக்காக கல்வி அமைச்சர் பத்லினாவின் அலுவலகத்தைத் தொடர்புகொண்உள்ளது.