இஸ்லாம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்ற கூற்றிற்கு சைபுதீன் கண்டனம்

இஸ்லாம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்றும், மலாய்க்காரர்கள் ஒற்றுமை அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் பின்தங்கியுள்ளனர் என்றும் கூறுவதை பிகேஆர் பொதுச்செயலாளர் சைபுதீன் நசுதின் இஸ்மாயில் கண்டித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் அரசு நிகழ்ச்சி நிரல் அல்லது அறிவிப்பு வெளியிடப்படும்போது, மதச்சார்பின்மை மற்றும் தாராளமயம் போன்ற அம்சங்களைத் தொட்டு, எதிர் அறிக்கைகளை வெளியிடும் சிலரின் செயலையும் சைஃபுதீன் சாடினார்.

“நாட்டின் முஸ்லீம் சமூகம் தங்கள் தொழுகையை (ஸோலாத்) நிறைவேற்றுவது, ஜகாத்தின் கீழ் கடமைகளை நிறைவேற்றுவது அல்லது ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளதா… ஒரு அம்சம் கூட தடை செய்யப்படவில்லை. முஸ்லீம்கள் தங்கள் ஃபர்து கடமைகளை நிறைவேற்றுவதை நிறுத்தினால் அல்லது தடுக்கப்பட்டால், இஸ்லாம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவிட்டது என்று சொல்லலாம்.

“நாங்கள் மதானியின் கீழ் உள்ள நிகழ்ச்சி நிரலைப் பற்றி பேசுகிறோம், அவர்கள் மதச்சார்பான  அம்சங்களைப் பற்றி பேசுகிறார்கள். நாங்கள் வறுமையை ஒழிப்பது பற்றி பேசுகிறோம், . நாங்கள் நல்லாட்சி பற்றி பேசுகிறோம், அது ஒரு தாராளமய நிகழ்ச்சி நிரல் என்று சொல்கிறார்கள்…”

நேற்று பிரதமர் அன்வார் இப்ராகிமின் கொள்கை உரையை ஆதரித்து இங்குள்ள புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் (பிஐசிசி) பிகேஆர் தேசிய ஆண்டு மாநாட்டை நிறைவு செய்தபோது சைபுதீன் இவ்வாறு கூறினார்.

இஸ்லாம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்ற கூற்றுக்கள் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்குமாறு ஐக்கிய அரசாங்கத்தின் கீழ் உள்ள முஸ்லிம் தலைவர்களை அன்வார் வலியுறுத்தினார்.

கோலாலம்பூரில் சமீபத்தில் நடந்த கோல்ட்பிளே இசைநிகழ்ச்சிகள் நிகழ்சியை பற்றி விவரித்த அவர், முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலும் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக கூறினார்.

“எங்கள் ஆட்சிக் காலத்தில் ஒரு இசைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டால்,  அன்வார் ஒரு தலைவராக இருக்க தகுதியற்றவர் என கூறுகிறார்கள், அவர் ஒரு தாராளவாதி. என்னை நம்புங்கள், நாங்கள் நிர்வகிக்கும் ஒவ்வொரு அம்சத்திலும், மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை புறக்கணிக்கும் தருணம் இல்லை. மக்களின் நலனைப் பாதுகாப்பதே எங்களின் முன்னுரிமையும் அக்கறையும் ஆகும்,” என்று அவர் கூறினார்.

 

 

-fmt