கிளந்தான் அடுத்த ஆண்டு சொந்த அரிசி முத்திரையை அறிமுகப்படுத்த உள்ளது

அடுத்த ஆண்டு மாநிலத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகக் கிளந்தான் அரசாங்கம் அதன் சொந்த அரிசி முத்திரை பெராஸ் அக்ரோ தாருல் நைமை(Beras Agro Darul Nai) அறிமுகப்படுத்தும்.

இதை உணர்ந்து அரிசி மற்றும் நெல் தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்குச் சிறப்பு ஒதுக்கீடு செய்யப்படும் என்று மாநில விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் மற்றும் பொருட்கள் குழுத் தலைவர் துவான் முகமது சரிபுதீன் துவான் இஸ்மாயில் கூறினார்.

துவான் முகமது சரிபுடின் துவான் இஸ்மாயில்

“இந்த முயற்சியானது கிளந்தான் வேளாண்மை வளர்ச்சிக் கழகம் மற்றும் Kelantan Agricultural Group Berhad மற்றும் முதலீட்டாளர் கூட்டாளர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது”.

மாநில சட்டமன்றத்தில் துவான் அசார் சாலே (பாஸ்-புலை காண்டோங்) வின் துணைக் கேள்விக்குப் பதிலளித்த அவர், “2024 ஆம் ஆண்டில் மெராண்டி, பாசிர் மாஸில் அரிசி மற்றும் நெல் தொழிற்சாலையை மேம்படுத்த மாநில அரசுச் சிறப்பு ஒதுக்கீட்டைத் தயாரித்துள்ளது”.

துவான் முகமட் சரிபுடின் மேலும் கூறுகையில், கிளந்தான் உணவு பாதுகாப்பு வழிகாட்டுதல் குழுவை அமைத்தல் உட்பட உணவு பாதுகாப்பில் உள்ள பிரச்சனைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளக் கிளந்தான் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.