பாஸ்போர்ட்-டை  திரும்பப் பெறும் நீதிமன்ற முயற்சியில் முகைதின் தோல்வி

 

ஜன விபாவா திட்டத்துடன் தொடர்புடைய மூன்று பணமோசடி குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள முன்னாள் பிரதமர் முகைதின் யாசினின் பாஸ்போர்ட்டை கோலாலம்பூர் நீதிமன்றம் தொடர்ந்து  வைத்திருக்கும்.

லண்டனில் குடும்ப விடுமுறைக்காகவும், இந்த ஆண்டு இறுதியில் சிங்கப்பூரில் மருத்துவப் பரிசோதனைக்காகவும் பாஸ்போர்ட்டைத் திரும்பப் பெறுவதற்கான பாகோ எம்பியின் முயற்சியை நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்தது.

நீதிபதி அசுரா அல்வி அந்தத் தீர்ப்பில், அந்த பெரிக்காத்தான் நேஷனல் தலைவர், குறிப்பிட்ட நோக்கங்களுக்காக அவரது பாஸ்போர்ட்டை  தற்காலிகமாக திருப்பித் தருவதற்கு நீதிமன்ற அனுமதிக்கு உட்பட்டு தாக்கல் செய்ய இன்னும் உரிமை உள்ளது என்றார்.

தற்காலிக நிவாரணம்

முகைதினின் வழக்கறிஞர் கே குமரேந்திரன் மற்றும் துணை அரசு வழக்கறிஞர் அஹ்மத் அக்ரம் காரிப் ஆகியோரின் சுருக்கமான வாய்மொழி சமர்ப்பிப்பைத் தொடர்ந்து, குற்றம் பாஸ்போர்ட்டை இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி வரை தற்காலிகமாக விடுவிக்க அசுரா அனுமதித்தார்.