முற்போக்கான ஊதியக் கொள்கையானது தேசத்தை “அடிமையாக” நடத்தும் மற்றொரு மானியத் திட்டமாக மாறாது என்று பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி இன்று தெரிவித்தார்.
கொள்கையின் கீழ் குறிப்பிட்ட சில துறைகளில் ஊதியத்தை உயர்த்துவதற்கான ஒரு தற்காலிக தலையீட்டின் கொள்கையாக இருக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று கூறினார். அதன் வழி ஊதியம் படிப்படியாக உயரும்.
மக்களவையில் கொள்கையின் நிலைத்தன்மை குறித்து கு அப்த் ரஹ்மான் கு இஸ்மாயில் (பிஎன்-குபாங் பாசு) கேள்விக்கு பதிலளித்த அவர் “பிற பொருளாதாரத் திட்டங்களுடன் சேர்ந்து, பொருளாதாரம் மற்றும் தொழில்கள் தயாரான திறமையுடன் வளரும்போது, எங்கள் பணியாளர் இழப்பீட்டு விகிதம் 40% (ஜிடிபியில்) நெருங்கும் வரை சம்பள விகிதம் அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், “அதன்பிறகு, திறமைக்கான சந்தை தானாகவே செயல்படும்,” என்று கூறினார்.
முற்போக்கான ஊதியக் கொள்கை குறித்த வெள்ளை அறிக்கையை 18 எம்.பி.க்கள் விவாதத்திற்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
12வது மலேசியத் திட்டத்தின் கீழ், 2025ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40% ஊழியர் இழப்பீட்டு விகிதத்தை அடைவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
முன்னதாக, கோவிட்-19 தொற்றுநோயால் பலர் வேலை இழக்க நேரிட்டது மற்றும் சம்பள உயர்வுக்கு இடையூறாக இருந்ததால், கடந்த ஆண்டு நிலவரப்படி ஊழியர் இழப்பீடு விகிதம் 32% ஆக இருந்தது.
-fmt