முன்னாள் சுகாதார அமைச்சர் சுவா நாட்டுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கினார் – பிரதமர்

பிரதமர் அன்வார் இப்ராகிம் நேற்று மதியம் மரணமடைந்த முன்னாள் சுகாதார அமைச்சர் சுவா ஜூய் மெங்கின்(Chua Jui Meng) குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

1995 முதல் 2004 வரை ஒன்பது ஆண்டுகளாக நாட்டின் மிக நீண்ட காலம் சுகாதார அமைச்சராக இருந்ததால், சுவா நாட்டிற்கு மகத்தான பங்களிப்பை வழங்கினார் என்று அன்வார் கூறினார்

பிகேஆரில் சுவாவும் முக்கியப் பங்காற்றினார், குறிப்பாக ஜொகூரில் கட்சியை வழிநடத்தும்போது.

“அவரது அனைத்து செயல்களும் பங்களிப்புகளும் நமது அன்பான நாட்டிற்காக அவருடன் இணைந்து போராடிய மக்கள் மற்றும் அவரது நண்பர்களால் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தின் நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன்,” என்று பிகேஆர் தலைவரான அன்வார் ஒரு முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

2009 இல் பிகேஆரில் சேருவதற்கு முன் அவர் MCA துணைத் தலைவராக இருந்தார்.

பிகேஆரில் இணைந்த ஒரு வருடத்தில் அதன் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.