பாஸ் கட்சியின் துணைத் தலைவர் அஹ்மத் சம்சூரி மொக்தாரை நாடாளுமன்றத்தில் வைத்திருப்பது நாட்டின் அரசியல் பதட்டத்தைத் தணிக்க உதவும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறினார்.
இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், மற்ற பாஸ் தலைவர்களுடன் ஒப்பிடும்போது திரங்கானு மந்திரி பெசார் ஒரு மிதவாத அரசியல்வாதி என்று குறிப்பிட்டார்.
சனிக்கிழமை நடந்த கெமாமன் இடைத்தேர்தல் முடிவுகுறித்து கருத்து கேட்டபோது, ”சம்சூரியின் வெற்றியை நான் வாழ்த்துவதோடு, அவரது புதிய கடமைகளைச் சிறப்பாகச் செய்யவும் வாழ்த்துகின்றேன்,” என்று அவர் கூறினார்.
PAS துணைத் தலைவர் அஹ்மத் சம்சூரி மொக்தார்
“நாட்டிற்கான நன்மையைப் பொறுத்தவரை, சம்சூரி தனது குழுவிற்கு ஓரளவு நிம்மதியைக் கொண்டுவர முடியும், ஏனெனில் அவர் தீவிரமானதாகக் கருதப்படும் மற்ற பாஸ் தலைவர்களுடன் ஒப்பிடும்போது மிதமானவர்”.
“நம்பிக்கையுடன் அவரைக் கொண்டிருப்பதன் மூலம், அது நாட்டின் அரசியல் பதட்டத்தைத் தணிக்க முடியும்,” என்று தம்புன் எம்.பி கூறினார்.
சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் BN ராஜா முகமது அஃபாண்டி ராஜா முகமது நூரை தோற்கடித்த சம்சூரி, கெமாமன் நாடாளுமன்றத் தொகுதியைப் பாஸ் கட்சிக்காகத் தக்கவைத்துக் கொண்டார்.
பெரிகத்தான் நேசனல் ஆட்சியைக் கைப்பற்றப் போகிறது என்று பறை சாற்றியவர்கள் உட்பட, தனது நிர்வாகத்திற்கு எதிராகப் பகைமையைக் காட்டிய பல பாஸ் தலைவர்களை அன்வார் நாடாளுமன்றத்தில் சாடினார் என்பது புரிந்தது.
‘அடிமட்டத்தை சந்திக்கும் அம்னோ’
வாக்கெடுப்பில் BN தோல்வியடைந்தது குறித்து அன்வார் கூறுகையில், அம்னோ ஆதரவாளர்கள் பலர் இன்னும் கட்சிக்கு வாக்களிக்க வெளியே வரவில்லை என்று தெரிகிறது.
இது, அவர்களின் ஆதரவாளர்களுக்கு விளக்கப் பிரச்சாரங்களை அதிகப்படுத்துவதன் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
“நேற்று பக்காத்தான் ஹராப்பானுக்கும் அம்னோ தலைவர்களுக்கும் இடையே ஒரு சந்திப்பை நடத்தினோம்”.
“மேலும் நான் விவாதத்தில் திருப்தி அடைகிறேன், ஏனென்றால் அவர்கள் (அம்னோ) அவர்களின் அடித்தட்டு மக்களைச் சந்திக்க தங்கள் இயந்திரங்களைத் திரட்டுவார்கள்,” என்று அன்வார் கூறினார்.