வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோர்கள் கடனைத் செலுத்த 3 மாத கால அவகாசம்

நாடு முழுவதும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட , சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) தொழில்முனைவோர் தங்களது கடனைத் திருப்பிச் செலுத்துவதை மூன்று மாதங்கள் வரை ஒத்திவைக்க விண்ணப்பிக்கலாம்.

டெக்கான் நேஷனல், அமன்ன இத்ஹ்டிர் மலேசியா, மற்றும் மலேசிய கூட்டுறவு ஆணையம் போன்ற அமைப்புகளின் கீழ் கடன்களை ஒத்திவைப்பது தொழில்முனைவோருக்கு  உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு மந்திரி யுவன் பெனெடிக் கூறினார்.

கொரோனேஷன் சதுக்கத்தில்  அலுவலக வேலைக்காக வந்த போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தங்கள் வணிக வளாகங்கள் அல்லது செயல்படும் இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால், மூன்று மாதங்கள் வரை திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைக்க அனுமதிக்கும் கொள்கையை நாங்கள் கொண்டுள்ளோம்” என்றார்..

இதற்கு முன்னதாக, நாட்டில் வடகிழக்கு பருவமழை நவம்பர் 11, 2023 முதல் மார்ச் 2024 வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

கிளந்தான், திரெங்கானு, பகாங், ஜொகூர் மற்றும் மேற்கு சரவாக்கில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

 

-fmt