கட்சி விலகல் பேச்சு வெறும் கற்பனையே என்கிறார் அன்வார்

அரசாங்க எம்.பி.க்கள் சம்பந்தப்பட்ட சாத்தியமான கட்சி விலகல்கள் பற்றிய ஊகங்களை நிராகரித்து, அதை “வெறும் கற்பனை” என்கிறார்  பிரதமர் அன்வார் இப்ராஹிம்.

அத்தகைய வதந்திகள் மத்தியில்  தான் உறுதியாக இருப்பதாகவும், பதற்றமடையாமல் இருப்பதாகவும், எனவே தனது அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் பலமான பெரும்பான்மை இருப்பதை  வலியுறுத்தினார்.

“நாடாளுமன்றத்தில் எங்களின் பலம் தெளிவாக அசைக்க முடியாததாக உள்ளது. ஆம், சிலர் இடம் மாறலாம், உண்மையில் அது 50 முதல் 60 வரை இருந்தால், என்னால் அவர்களைத் தடுக்க முடியாது.

கட்சி தாவல் எதிர்ப்பு சட்டத்தை குறிப்பிட்டு “ஆனால் தற்போதைய சட்டத்தின் அடிப்படையில், இந்த பிரிவுகள் வெறும் கற்பனையே” என்றும் அவர் கூறினார்.

நேற்று இரவு தொலைக்காட்சி3 க்கு அளித்த பேட்டியில் அன்வார் இவ்வாறு கூறினார்.

பக்காத்தான் ஹராப்பான் தலைவர், தனது அரசாங்கத்தின் பலத்தை அறிந்திருப்பதால், கட்சித் தாவல்கள் பற்றிய பேச்சுகளால் தாம் கவலைப்படவில்லை என்றும், “கடவுள் விரும்பினால், அந்த வலிமையுடன், நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவோம்,” என்று அவர் கூறினார்.

கடந்த வாரம், சினார் ஹரியான், கூறியதை மேற்கோள் காட்டி, பாரிசான் நேசனல் மற்றும் பிகேஆர் உள்ளிட்ட அரசாங்க எம்பிக்கள் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பெரிக்காத்தான் நேசனலுக்கு ஆதரவளிப்பார்கள் என்று பெர்சத்து உச்சசபை சட்டமன்ற உறுப்பினர் ரெட்சுவான் யூசோப் கூறினார்.

 

 

-fmt