சிவகுமாருக்கு பதிலாக சிம் – மக்கள் தீர்மானிக்கட்டும் என்கிறார் புதிய மனிதவளத்துறை அமைச்சர்

முன்னாள் டிஏபி சகாவான பி ராமசாமி, மனித வள  இலாக்காவைக் கையாளும் திறன் குறித்த கேளிவிக்கு, தனது செயல்திறனை மதிப்பிடும் பொறுப்பை பொதுமக்களுக்கு விட்டுவிடுகிறேன் என்று புதிதாக நியமிக்கப்பட்ட மனிதவளத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார் .

தனது முதல் நாள் வேலை என்பதால் மந்திரி பதவியை கையாளும் திறமையை பர்றி உடனடியாக ராமசாமி  கேள்வியெழுப்ப வேண்டாம் என்றும் சிம் கூறினார்.

“நாங்கள் செயல்பட ஆரம்பித்ததும் மக்கள்  தீர்ப்பளிக்கட்டும்.

“பொதுமக்கள் நம்மைப் பற்றி தீர்ப்பளிக்க அனுமதிப்போம்,” என்று அவர் அமைச்சராக தனது முதல் நாள் வேலையை முடித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னர் துணை நிதியமைச்சராக இருந்த சிம், மலேசியாவில் தொழிலாளர்களின் இன அல்லது மத பின்னணியைப் பொருட்படுத்தாமல் அவர்களின் கண்ணியத்தை உயர்த்துவதற்கான தனது அர்ப்பணிப்பை அளிப்பேன் என்று உறுதியளித்தார்.

நேற்றைய அமைச்சரவை மறுசீரமைப்பைத் தொடர்ந்து, அனுபவமின்மை காரணமாக மனித வள அமைச்சகத்தை திறம்பட வழிநடத்தும் சிம் திறன் குறித்து ராமசாமி சந்தேகம் தெரிவித்திருந்தார்.

பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ஒரே அமைச்சரான வி சிவகுமாருக்குப் பதிலாக மனித வளத்துறை அமைச்சராக சிம் நியமிக்கப்பட்டார்.