RapidKL மோனோரெயில் ரயிலின் டயர் இன்று தீப்பிடித்தது, எரியும் சக்கரத்தின் ஒரு பகுதி சாலையில் விழுந்தது.
RapidKL இன் கூற்றுப்படி, ஒரு நடத்துனர் சுமார் 12.40 மணியளவில், ரயிலின் பக்கத்திலிருந்து புகை வெளியேறுவதைக் கண்டார்.
சோதனைக்காக டிடிவாங்சா நிலையத்திற்கு ரயில் புறப்படுவதற்கு முன்பு அனைத்து பயணிகளும் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அப்போது அங்கு எரிந்து கொண்டிருந்த டயரின் ஒரு பகுதி கீழே சாலையில் விழுந்தது.
எரியும் இடிபாடுகளால் உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லையெனத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
மதியம் 2 மணியளவில் தீ அணைக்கப்பட்டது.
RapidKL அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதாகவும், சம்பவத்திற்கான காரணத்தை விசாரிப்பதாகவும் கூறியுள்ளது.