கிறிஸ்துமஸ் நாட்டில் அமைதியையும் ஒற்றுமையையும் கொண்டுவரும் – பிரதமர்

நாடு தொடர்ந்து பொருளாதாரதில் வளர்ச்சி அடையவும், முதலீட்டை அதிகரிக்கவும், தீவிர வறுமையை ஒழிக்கவும் அனைத்து மக்களின் ஒற்றுமை அவசியம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார்.

நேற்றிரவு தனது முகநூலில் ஒரு செய்தியின் மூலம், பிரதமர் இந்தக் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டம் சமூகத்தின் பின்னணியில் உள்ள வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் எப்போதும் அன்பாகவும், கனிவாகவும், மக்களிடையே நன்மையைப் பரப்பவும் ஒரு உத்வேகமாக இருக்கும் என்றார்.

“நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ சமூகத்தினருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். கிறிஸ்மஸ் தினம் என்பது கிறிஸ்தவர்களுக்கு ஒரு பெரிய நாள் மற்றும் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகிறார்கள்”.

“இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நாட்டிற்கும் மலேசிய மக்களுக்கும் மகிழ்ச்சி, அமைதி, நல்லிணக்கம், செழிப்பு மற்றும் ஒற்றுமையைத் தொடரட்டும்,” என்று அவர் தனது கிறிஸ்துமஸ் 2023 செய்தியில் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.