சட்டவிரோத மருந்துப் பொருட்களை விற்பனை செய்யும் 1,675 இணையதளங்கள் முடக்கம்

அக்டோபர் 3 முதல் அக்டோபர் 10 வரை நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனை  மூலம் சட்டவிரோத மருந்துப் பொருட்களை விற்பனை செய்யும் 1,675 இணையதளங்களுக்கான அணுகலை அதிகாரிகள் தடுத்துள்ளதோடு, 500,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் மருந்தக சேவைகளின் மூத்த இயக்குனர் நோர்ஹலிசா ஏ ஹலீம் கூறுகையில், 76% இணையத்தளங்கள் சட்டவிரோத மருந்து தயாரிப்புகளை இணைய வர்த்தக தளங்கள் மூலம் விற்பனை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

“இந்த இணைப்புகள் தொடர்பான புகார்கள் அனைத்தும் மலேசியன் தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் ஆணையம் (எம்சிஎம்சி) மற்றும் சமூக ஊடகங்கள் மற்றும் இணைய வர்த்தக தளத்தில் வழங்குநர்களுக்கு அனுப்பப்பட்டு, தளங்களுக்கான அணுகலைத் தடுக்கவும், உள்ளடக்கத்தை அகற்றவும் அனுப்பப்பட்டது.

“தகுதியற்ற அல்லது அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களால் கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளான மனநோய் சார்ந்த பொருட்கள், வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் இருமல் மருந்துகளின் விற்பனை அதிகரித்துள்ளது” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

 

 

-fmt