டைம் மீதான விசாரணை சட்டத்தின் கீழ் – எம்ஏசிசி

பண்டோரா ஆவணங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில்தான் முன்னாள் நிதியமைச்சர் டைம் ஜைனுதீனை விசாரித்து வருவதாக எம்ஏசிசி தெரிவித்துள்ளது.

பெட்டாலிங் ஜெயா: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) முன்னாள் நிதியமைச்சர்  டைம் “பலிவாங்கும் வேட்டைக்கு” உட்பட்டதாகக் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. பாரபட்சமின்றி, சட்டத்தின்படி அவர் விசாரிக்கப்படிவார் என்றும் வலியுறுத்தியது.

“டைம் எந்தத் தவறும் செய்ததாக எம்ஏசிசி எந்த அதிகாரபூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை.

“அவரது வழக்கைப் பொறுத்தவரை, பண்டோரா ஆவணங்களில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பிப்ரவரி 2023 இல் விசாரணையைத் தொடங்கினோம்.

“ஜூன் 7, 2023 அன்று, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009 இன் பிரிவு 36(1)(a) இன் கீழ் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது, உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள அனைத்து சொத்துகளையும் எழுத்துப்பூர்வமாகவும் உறுதிமொழி மூலமாகவும் அறிவிக்கும்படி கேட்டுக் கொண்டது.  அறிவிப்பு வெளியான நாளிலிருந்து அவருக்கு 30 நாட்கள் அவகாசம் கொடுக்கப்ட்டது என்று ஏஜென்சி இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

FMT