புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை எனத் தகவல் தொடர்பு அமைச்சர் பஹ்மி பட்சில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் மிருகத்தனத்தால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு ஒற்றுமை மற்றும் பல மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கான அடையாளம் இந்த முடிவு என்று அவர் கூறினார்.
“இருப்பினும், மாநில அரசு மற்றும் உள்ளாட்சி நிலைகளில், அவர்களின் உள்ளூர் சூழலுக்கு ஏற்றக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இருக்கலாம்,” என்று அவர் கூறினார்.
நேற்றிரவு சிலாங்கூரில் உள்ள ஷா ஆலமில் Pertubuhan Kebajikan dan Dakwah Islamiah Malaysia (Pekida) ஆண்டுப் பொதுச் சபையை நடத்திய பின்னர் பஹ்மி ஊடகங்களிடம் பேசினார்.
தகவல் தொடர்பு அமைச்சர் பஹ்மி பட்சில்
முன்னதாக, இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை மலேசியா (Jakim) இந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 31) கோலாலம்பூரில் உள்ள தேசிய மசூதியிலும், புத்ர மசூதியிலும், முஸ்லீம்களுக்கு மாற்றாகத் துவாங்கு மிசான் ஜைனல் அபிதின் மசூதியிலும் ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், சபா, கிளந்தான், பகாங், சிலாங்கூர் மற்றும் திரங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 130 தகவல் தொடர்பு நிலையங்களின் நிலைகுறித்து, இன்றுவரை, 53 நிலையங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன, மீதமுள்ளவை இன்னும் சரிசெய்யப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் கூறினார்.
“ஒன்று அல்லது இரண்டு நாட்களில், இந்த எண்ணிக்கை குறையும் என்று நான் நம்புகிறேன், மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பொறுத்தவரை, அவை தொலைத்தொடர்பு கோபுரங்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை மதிப்பீடு செய்வோம்,” என்று அவர் கூறினார்.
தொடர்ச்சியான சம்பவங்களைத் தடுக்க தகவல் தொடர்புச் சாதனங்களை உயர் மட்டங்களுக்கு உயர்த்துவதன் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தளத்தைக் கடினப்படுத்த அறிவுறுத்துவேன் என்று அவர் கூறினார்.