வெள்ளத்தால் பள்ளிகளில் 1 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் சேதம் ஏற்பட்டுள்ளது

டிசம்பரில் பல மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்வி அமைச்சகத்திற்கு சொந்தமான சொத்துக்களுக்கு 1 மில்லியன் ரிங்கிட்-க்கும் அதிகமாக  சேதம் ஏற்பட்டுள்ளது.

இது ஆரம்ப அறிக்கையின் அடிப்படையிலானது என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக் கூறினார், அந்தந்த மாநில கல்வித் துறைகள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்கள் பள்ளிகளால் ஏற்பட்ட சேதத்தை இன்னும் மதிப்பீடு செய்து வருவதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

“முதற்கட்ட அறிக்கைகளின்படி, மதிப்பிடப்பட்ட சேதம் 1 மில்லியன் ரிங்கிட்டைடைத்  தாண்டியுள்ளது, இதில் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள மரத்தால் அனா பொருட்கள், வேலிகள் மற்றும் வெளிப்புற கட்டமைப்புகளும்ன, கிளந்தான், தெரெங்கானு மற்றும் பகாங்கில் உள்ள அசையா சொத்துக்களின் சேதம் ஆகியவை அடங்கும்,” என்று அமைச்சர் மேற்கோள் காட்டினார்.

வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக நிவாரண மையங்களாக மாற்றப்பட்ட ஒவ்வொரு பள்ளிக்கும் துன் ஹுசைன் ஒன் டீச்சர்ஸ் ஃபவுண்டேஷனிடமிருந்து 2,000 ரிங்கிட் உதவி வழங்கப்படும், அதே நேரத்தில் அமைச்சகத்தின் தன்னார்வலர்கள் வளாகத்தை சுத்தம் செய்ய உதவுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளத்தில் மொத்தம் 133 தொடக்கப் பள்ளிகள், 23 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஒரு பெர்மாட்டா குழந்தை பராமரிப்பு மையம் ஆகியவை பாதிக்கப்பட்டன.

செய்தியாளர்களின் கூற்றுப்படி, சுமார் 207 கல்வி நிறுவனங்கள் நிவாரண மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. அவை 173 தொடக்கப் பள்ளிகள், 33 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஒரு தொழிற்கல்லூரியை உள்ளடக்கியது.

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, ஒன்பது தொடக்கப் பள்ளிகள் மற்றும் ஒரு நடுநிலைப் பள்ளி இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு தொடக்கப் பள்ளிகள் இன்னும் நிவாரண மையங்களாகப் பயன்படுத்தப்படுவதாகவும் ஃபத்லினா கூறினார்.

இருந்தபோதிலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது அமைச்சின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் இன்று மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன என்று அவரை கூறினார்.

“சம்பந்தப்பட்ட மாநிலக் கல்வித் துறைகள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்கள், பள்ளிகள் சாதாரணமாக இயங்குவதை உறுதிசெய்ய, கையிருப்பு அல்லது உபரி தளபாடங்கள் மற்றும் பாடப்புத்தகங்களை அதே மாவட்டத்தில் உள்ள பள்ளிகளிலிருந்து தேவைப்படுபவர்களுக்கு இடமாற்றம் செய்வது போன்ற உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளன.”

தற்போதைய சூழ்நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பாடசாலை சீருடையில் செல்லாமல் சாதாரண உடையில் பாடசாலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

 

 

-fmt