ஜொகூரில் வெள்ள நிலைமை நாள் முழுவதும் மோசமடைந்தது, ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,024 பேர் 13 நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி நிவாரண மையங்களுக்கு இடம்பெயர்ந்த 330 பேருடன் ஒப்பிடும்போது இது மூன்று மடங்கு அதிகமாகும்.
நேற்றிரவு முதல் பலத்த இடைவிடாத மழைக்குப் பிறகு நான்கு மாவட்டங்கள் – குலுவாங், மெர்சிங், ஜொகூர் பாரு மற்றும் கோத்தாதின்கி – வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக வட்டாரங்கள் அறிவித்தது.
வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் சாலைகள் மூடப்பட்டுள்ளன.
-fmt