தண்ணீர் தடையின் போது தொழிலாளர்களின் ஊதியத்தை குறைக்கும் நிறுவனங்களுக்கு 50,000 ரிங்கிட் அபராதம்

ஜனவரி 10 முதல் 14 வரை பினாங்கில் தண்ணீர் விநியோகம் தடைபட்டதைத் தொடர்ந்து முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை நிறுத்தினால் அல்லது பணிநிறுத்தம் செய்யத் தேர்வுசெய்தால், அல்லது வருடாந்தர விடுப்பில் செல்லுமாறு கட்டாயப்படுத்தினால், வேலைவாய்ப்புச் சட்டம் 1955ன் கீழ் 50,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படும்.

இதுபோன்ற வழக்குகள் எழுந்தால், முதலாளிகளும் ஊழியர்களும் தங்கள் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைக்காக இதுபோன்ற  தொழிலாளர் துறையை பார்க்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.

பினாங்கில் தண்ணீர் தடைசெய்வதன் விளைவாக, தங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டபோது, தங்களின் வருடாந்திர விடுப்பைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக உற்பத்தித் துறையில் உள்ள சில தொழிலாளர்கள் கூற்றுக்கு சிம் இவ்வாறாக பதிலளித்தார்.

பினாங்கில் உள்ள சமூக பாதுகாப்பு அமைப்பின் அலுவலகத்திற்கு (Socso) சென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

தனித்தனியாக, இந்த ஆண்டு இல்லத்தரசிகளின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பங்களிப்பாளர்களின் எண்ணிக்கையை 500,000 ஆக உயர்த்துவதற்கான கூடுதல் நடவடிக்கைகளை சொக்ஸோ மூலம் தனது அமைச்சகம் அறிமுகபப் படுத்தவுள்ளது.

2022 ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இந்தத் திட்டத்தில் பங்களிப்பாளர்களின் எண்ணிக்கை சுமார் 200,000 மட்டுமே.

“நாட்டில் சுமார் மூன்று மில்லியன் பெண்கள் முழுநேர இல்லத்தரசிகளாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன, எனவே தற்போதைய 200,000 எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது”.

இந்தத் திட்டம் முழுநேர இல்லத்தரசிகளுக்கு மட்டும் அல்ல, ஏனெனில் சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 120 ரிங்கிட் வருடாந்திர கொடுப்பனவுகளுடன் பணிபுரியும் பெண்களும் மாதத்திற்கு 10 ரிங்கிட் மட்டுமே செலுத்தி இத்திட்டத்தில் பங்களிக்க முடியும் என்று சிம் கூறினார்.

 

 

-fmt