மித்ரா குழுவை நிர்வகிக்க டிஏபி – பிகேஆர் போட்டி

பிகேஆர் மற்றும் டிஏபி ஆகியவை சமீபத்தில் ஒற்றுமை அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட மலேசிய இந்திய மாற்றுப் பிரிவின் (மித்ரா) கீழ் ஒரு சிறப்புக் குழுவை யார் பராமரிப்பது , அதற்கு யார் தலைமை தாங்குவது என்பது குறித்த விவாதம் சூடு பிடிதுள்ளது..

டிஏபி அதைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறது, அதே நேரத்தில் பிகேஆர்,  சுங்கை பூலோ எம்பி ஆர் ரமணன் தலைமையிலான குழுவைக் கலைக்க விரும்புகிறது.

குழு கலைக்கப்படுவதை டிஏபி விரும்பவில்லை என்றும், அப்ப்டிச் செய்தால்  அது பிகேஆரின் ஒற்றுமை துணை அமைச்சர் கே சரஸ்வதியின்  கட்டுப்பாட்டில் மித்ர இருக்க வழிவகுக்கும் என்று வாதிடுகிறது.

“முன்னாள் பினாங்கு துணை முதல்வர் பி ராமசாமி வெளியேறியதைத் தொடர்ந்து இழந்த இந்திய ஆதரவை மீண்டும் பெற வேண்டும் என்று கட்சி விரும்புகிறது” .பினாங்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் 43% இந்திய வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர், நவம்பர் 2022 இல் நடந்த 15வது பொதுத் தேர்தலில் 65% பேர் வாக்களித்தனர்.

பினாங்கில் உள்ள இந்திய சமூகத்தில் பிரபலமான ராமசாமியை வேட்பாளராக நிறுத்த தாத கட்சியின் முடிவு குறைந்த வாக்குப்பதிவுக்கு காரணம் என்று எம்பி ஓங் கியான் மிங் கூறினார். இதன் விளைவாக ராமசாமி கடைசியில் கட்சியில் இருந்து விலகினார்.

ஜெலுத்தோங் எம்பி ஆர்எஸ்என் ராயர் மித்ர தலைவர் பதவிக்கு முன்னணியில் இருப்பார் என்ற ஊகங்கள் பரவலாக உள்ளன.

ஒற்றுமை அமைச்சகத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ள பினாங்கு இந்து அறநிலைய வாரியத்தின் தலைவராகவும் ராயர் உள்ளார்.

கடந்த மாதம், பிரதமர் அன்வார் இப்ராகிம், மித்ரா மீண்டும் ஒற்றுமை அமைச்சகத்திற்கு கீழ் இயங்கும் என அறிவித்தார்.

 

 

-fmt