மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் அப்துல்லா சிடி இன்று காலை தனது 100- வது வயதில் காலமானார்.
தாய்லாந்தின் நாராதிவாட்டில் உள்ள சுக்ரின் அமைதி கிராமத்தில் காலை 9.29 மணியளவில் அப்துல்லா தனது இறுதி மூச்சை விட்டார் என்று அவரது மருமகன் இந்திரா டிஜா அப்துல்லா பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
அந்த இடுகையில் மரணத்திற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை, ஆனால் வயது முதிர்வு காரணமாக அப்துல்லா இறந்ததாக நம்பப்படுகிறது. அவருக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லை என்பது தெரிந்தது.
அப்துல்லா, உண்மையான பெயர் சே தாட் அஞ்சாங் அப்துல்லா, 1948 இல் CPM இல் சேருவதற்கு முன்பு பேராக்கில் பிறந்து வளர்ந்தார், மலாயாவில் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடுவதில் தீவிரமாக பங்கேற்றார்.
மலாயா மக்கள் விடுதலை இராணுவத்தின் 10வது படைப்பிரிவையும் அவர் நிறுவினார், அது இப்போது செயல்படாத CPM ஆல் உருவாக்கப்பட்ட கொரில்லா இராணுவமாகும்.
இந்த கம்யூனிஸ்ட் தலைவர், சிபிஎம்-மின் முன்னாள் பொதுச்செயலாளர் சின் பெங்கின், கட்டளையின் கீழ் மற்றும் ரஷித் மைதீன் மற்றும் ஷம்சியா ஃபக்கே போன்ற பல முக்கிய சிபிஎம் பிரமுகர்களுடன் இணைந்து 1989 இல் ஹட்ஞய் அமைதி ஆயுத போரட்டத்தை கைவிடும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக் கொள்ளும் வரை போராடினார்.
சமாதான உடன்படிக்கையானது ஆயுதங்களை கைவிட்ட முன்னாள் சிபிஎம் உறுப்பினர்கள் திரும்பவும் வந்து 1963 இல் உருவாக்கப்பட்ட மலேசிய கூட்டமைப்பில் வசிக்க அனுமதித்தது.
இருப்பினும், அப்துல்லா மற்றும் பலர் திரும்பி வரவில்லை, சுக்கிரினில் தங்க முடிவு செய்தனர்.
‘வரலாறு நியாயமாக இருக்கட்டும்’
இதற்கிடையில், அவரது மரணம் குறித்த செய்தியைத் தொடர்ந்து அரசியல்வாதிகள் உட்பட பலர் இரங்கல்களைத் தெரிவித்தனர்.
“இந்த நாட்டிற்கான உண்மையான சுதந்திரத்திற்கான போராட்டத்தில் அவர் தேசிய ரீதியில் உறுதியாக இருந்தார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது” என்று பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் சையத் ஹுசின் அலி கூறினார்.
PSM இன் S அருட்செல்வன், ஒரு அறிக்கையில், மலேசியாவின் சுதந்திரத்திற்காக அப்துல்லாவின் போராட்டத்திற்கு வரலாறு நியாயமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“அவரது எழுத்துக்களும் உலகக் கண்ணோட்டமும் அனைவரும் படிக்கக் கூடியவை. சுதந்திரத்திற்காகப் போராடிய அவரது பங்களிப்புகளையும் மலாயா கம்யுனிஸ்கட்சியையும், துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களே ஒப்புக்கொண்டார். மற்றும் ஹட்ஞய் யில் கையெழுத்திட்ட அமைதி ஒப்பந்தம் அவரது தலைமையின் சாட்சியமாகும், இது வரலாற்றில் இருந்து அழிக்க முடியாதது.
“வரலாறு அவருக்கு நியாயமாகவும், பாரபட்சமற்றதாகவும் இருக்கட்டும்” என்று அருள் கூறினார்.
முன்னாள் எம்டியூசி தலைவர் சையத் ஷாஹிர் சையத் முகமது கூறுகையில், அப்துல்லா மறக்க முடியாத ஒரு முக்கியமான நபர் என்றார்.
“அவர் நமது வரலாற்றில் முக்கியப் பங்காற்றினார், அதை யாராலும் மறுக்க முடியாது. முன்னாள் துணைப் பிரதமர் மறைந்த டாக்டர் இஸ்மாயில் அப்துல் ரஹ்மான் கூட, சுதந்திரத்திற்கான அவர்களின் பங்களிப்புகளுக்காக அப்துல்லா மற்றும் ரஷீத் மைதீன் போன்ற சிபிஎம் தலைவர்களை பாராட்டினார்.
“1940 களில் சுதந்திரப் போராட்டத்தின் போது பார்ட்டி கெபாங்சான் மெலாயு மலாயாவைச் சேர்ந்த மற்றொரு முன்னாள் துணைப் பிரதமரான கபார் பாபாவுடன் அவர்கள் நல்ல உறவைக் கொண்டிருந்தனர்.
“நம்மிடையே வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் வரலாறு அப்படியே இருக்க வேண்டும். அப்துல்லா போன்றவர்களின் பங்களிப்புகளை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
“அவர் காலமானதை அரசாங்கம் அங்கீகரிப்பதை நான் பார்க்க விரும்புகிறேன்” என்று சையத் ஷாஹிர் கூறினார்.
இதற்கிடையில், பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அப்துல் கரீம், அப்துல்லா ஒரு தேசபக்தர் என்பதையும் மலேசியர்களுக்கு நினைவூட்டினார்.
“அவர் மலாயா விடுதலைக்காகவும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் இருந்து விடுதலை பெறவும் போராடினார்.”
“பிரிட்டிஷ் காலனித்துவத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஆயுதப் போராட்டத்தை அவர் நம்பினார்,” என்கிறார், அப்துல்லாவுக்கு அஞ்சலி செலுத்திய ஹசான் கரீம்.